எக்ஸ்மென் கொஞ்சம் ஆக்டோபஸ் கொஞ்சம்.. மகேஷ் பாபுவுக்காக ராஜமெளலி உருவாக்கிய வில்லனை பாருங்க!
ஹைதராபாத்: மகேஷ் பாபுவின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு முன்னதாக தனது படத்தின் வில்லனை முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி. மகேஷ் பாபுவின் 29வது படமாக உருவாகி வரும் படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக வில்லனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
வாரணசி என்கிற தலைப்பில் தான் மகேஷ் பாபு படம் உருவாகி வருவதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்த நிலையில், அதனை கிட்டத்தட்ட உறுதி செய்யும் வகையிலேயே பிருத்விராஜின் கேரக்டர் பெயர் அமைந்துள்ளது.

மகேஷ் பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ராஜமெளலியின் அடுத்த மெகா பட்ஜெட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தால் ஹாலிவுட்டில் இருந்து ஹெவியாக இன்ஸ்பயர் ஆகியிருப்பது போலவே தெரிகிறது.
மகேஷ் பாபுவுக்கு இவர் தான் வில்லன்: பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முதலில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன் பிறகு அவருக்கு பதிலாக பிருத்விராஜ் அந்த கதாபாத்திரத்தில் கமிட்டானார். பிரபாஸுக்கு வில்லனாக சலார் படத்தில் நடித்த நிலையில், மகேஷ் பாபுவுக்கு வில்லனாகவும் பிருத்விராஜ் ராஜமெளலி படத்தில் நடித்து வருகிறார். கும்பா எனும் கதாபாத்திரத்தில் அவரது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
டாக்டர் ஆக்டோபஸ் கொஞ்சம் எக்ஸ்மென் கொஞ்சம்: ஹாலிவுட்டில் வெளியான எக்ஸ்மென் படத்தில் புரொஃபஸர் எக்ஸ் எப்படி வீல் சேரில் வருவாரோ அதே போல ஒரு வீல் சேரில் பிருத்விராஜை அமர வைத்திருக்கிறார் ராஜமெளலி. மேலும், ஸ்பைடர் மேன் 2 படத்தில் வரும் டாக்டர் ஆக்டோபஸ் வில்லனிடம் இருந்து எக்ஸ்ட்ரா ரோபோடிக் கைகளையும் பொருத்திக் கொண்டு மகேஷ் பாபுவை துரத்த முடிவு செய்திருக்கிறார்.

24 ஆத்ரேயா: விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த 24 திரைப்படத்தில் சூர்யா ஆத்ரேயா கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். அவரும் இப்படித்தான் ஒரு வீல் சேரில் வந்து மிரட்டி விட்டிருப்பார். அதே பாணியிலான ஒரு வில்லனை கொஞ்சம் டெக்னாலஜி வில்லத்தனத்துடன் மிரட்ட வைக்க ராஜமெளலி முடிவு செய்திருக்கும் நிலையில், திரையில் அவருடைய காட்சிகள் மற்றும் மகேஷ் பாபுவுடனான மோதல்கள் எப்படி இருக்குமோ அதை பொறுத்து தான் இந்த கும்பா ரசிகர்களை கவர்வார் என தெரிகிறது.
நவம்பர் 15ம் தேதி: வரும் நவம்பர் 15ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிப்பு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னதாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட திட்டமிட்டுள்ள ராஜமெளலி முதலில் கும்பாவை இறக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











