கையில் வில்லேந்தி.. பிரளயமாக வெடிக்கும் அல்லுரி சீதாராமராஜு.. ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டம்!

சென்னை: இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் ஆலியா பட்டின் சீதா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில், தற்போது ராம்சரணின் அல்லுரி சீதாராமராஜு கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியான ராம்சரணின் கதாபாத்திர மோஷன் போஸ்டர்களை விட இந்த போஸ்டர் படு மிரட்டலாக உள்ளது.

அல்லுரி சீதாராமராஜு

அல்லுரி சீதாராமராஜு

ஆங்கிலேயர்களை எதிர்த்து நாடு முழுவதும் ஏகப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை கொடுத்து நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்துள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தொடங்கி ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் வரை அத்தகைய வீரர்களின் பெருமையை சொல்லும் ஏகப்பட்ட படங்கள் பிரம்மாண்ட முறையில் படமாக்கப்பட்டு வருகின்றன. அல்லுரி சீதாராமராஜு எனும் புரட்சியாளரின் கதை தான் ஆர்.ஆர்.ஆர். படமாக உருவாகி வருகிறது.

அடுத்த பிரம்மாண்டம்

அடுத்த பிரம்மாண்டம்

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி படம் உலகளவில் மிகப்பெரிய வசூலை குவித்த நிலையில், இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகி வருகிறது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சீதையாக

சீதையாக

ஆர்.ஆர்.ஆர் படமும் கிட்டத்தட்ட ராமாயணம் கதை போலவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ ராம்சரண் அல்லுரி சீதாராஜாராமு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், ஆலியா பட் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டார்.

கையில் வில்லேந்தி

கையில் வில்லேந்தி

இந்நிலையில், தற்போது கையில் வில்லேந்தி அப்படியே ராமராகவே மாறி பிரளயமாக வெடிக்கும் அல்லுரி சீதாராஜாராமு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோ ராம்சரணின் மிரட்டலான போஸ்டரை தற்போது இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டு ஒட்டுமொத்த சினிமா துறையின் பார்வையையும் கவர்ந்துள்ளார்.

Recommended Video

முதல் முறையாக வரலாற்று படம் எடுக்கும் சங்கர் | Ram Charan Pan India Movie
ஏன் இப்போ

ஏன் இப்போ

ஆர்.ஆர்.ஆர் படம் இந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போதே புரமோஷன் பணிகளை ஆரம்பிக்க என்ன காரணம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பாகுபலி வசூலை மிஞ்ச வேண்டும் என்பதற்காக இப்போதிருந்தே மார்க்கெட்டிங் வேலையை ஆரம்பிக்க தொடங்கி விட்டார்களா? என்கிற கேள்வியும் படத்தை சீக்கிரமே வெளியிட ஏதும் திட்டம் உள்ளதா என்றும் ரசிகர்களை பலவிதமாக சிந்திக்க வைத்து பட புரமோஷனை ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X