பாகுபலி 3 உண்டா... என்ன சொல்கிறார் ராஜமௌலி?
திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய பாகுபலி யின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பாகுபலியின் மூன்றாம் பாகத்தையும் ராஜமௌலி உருவாக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
உண்மைதானா? என்று பலரும் ராஜமவுலியிடம் கேட்டுள்ளனர்.

அனைவருக்கும் பேஸ்புக்கில் பதில் சொல்லியிருக்கிறார் ராஜமௌலி.
அதில், "பாகுபலி 3 பற்றி பல வதந்திகள் உலா வருகின்றன. இரண்டாவது பாகத்தோடு முற்றுப் பெறுகிறது பாகுபலி. மூன்றாம் பாகம் என்று இழுக்க விரும்பவில்லை. ஆனால் பாகுபலியின் உலகம் இதுவரை யாரும் பார்த்திராத புதிய அனுபவங்களுடன் விரிந்து கொண்டே இருக்கும். உரிய தருணத்தில் அதுபற்றி அறிவிப்பேன். வதந்திகளை நம்ப வேண்டாம். உண்மை எனக்கு மட்டும்தானே தெரியும்?" என்று கூறியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications