ப்பா.. என்ன ஒரு கூஸ்பம்ப்ஸ்.. ராஜமெளலியின் ராஜ வேட்டை.. வெளியானது ஆர்.ஆர்.ஆர் டிரைலர்!
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் பிரம்மாண்ட டிரைலர் லாஞ்ச் விழா தற்போது நடைபெற்று வருகிறது.
திரையரங்குகளில் காலை டிரைலரை வெளியிட்டு பின்னர் மதியம் 3 மணிக்கு மேல் யூடியூபில் வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு டிரைலர் இணையத்தில் கசியத் தொடங்கிய நிலையில், அதிரடியாக வெளியிட்டுள்ளது.

ராஜமெளலியின் ராஜ வேட்டை
நான் ஈ, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட படங்களை இயக்கி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த இயக்குநர் ராஜமெளலி அடுத்த ராஜ வேட்டையை நடத்த ஆர்.ஆர்.ஆர் படத்தை உருவாக்கி உள்ளார். 3 நிமிடம் 4 நொடிகள் ஒடக் கூடிய இந்த டிரைலரை ஒவ்வொரு ஃபிரேமாக நிறுத்தி நிறுத்தி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ராமராக மாறிய ராம்சரண்
பிரிட்டிஷ் படையில் போலீஸ் அதிகாரியாக இருந்து போராடும் மக்களை அடித்து உதைக்கும் கொடூர அதிகாரியாக ஆரம்பத்தில் காட்டப்படும் ராம்சரண் பீம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜூனியர் என்.டி.ஆரின் நட்பு கிடைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கிளைமேக்ஸில் ராமர் போலவே மாறி அம்பு விட்டு ஆங்கிலேயர்களை துவம்சம் செய்யும் காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கின்றன.

புல்லட், புலி
சிஜி புலியை அல்லேக்காக தூக்கி மல்லாக்கப் போட்டு மிதிக்கும் கொமரம் பீமாக என்ட்ரி கொடுக்கும் ஜூனியர் என்.டி.ஆர் கடைசியில் ராம்சரண் உடன் கை கோர்த்துக் கொண்டு புல்லட்டை எல்லாம் அசால்ட்டாக தூக்கி சுழற்றி அடித்து ஒற்றை கையில் தூக்கும் காட்சிகள் கொஞ்சம் மிகையாக இருந்தாலும் மசாலா ரசிகர்களுக்கான மாஸ் ட்ரீட்டாக பார்க்கப்படுகிறது.

சுதந்திர போராட்டம்
இந்தியன் படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய சுதந்திர போராட்டக் கதையை இந்திய சினிமா ரசிகர்களுக்கு கொடுக்க தயாராகி விட்டார் இயக்குநர் ராஜமெளலி என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. அஜய் தேவ்கன், ஸ்ரேயா, ஆலியா பட், சமுத்திரகனி, ஆங்கிலேய நடிகர்கள் என காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் கண் முன்னே விரிகிறது.
முன்னதாக லீக்
திரையரங்குகளில் டிரைலரை வெளியிட்டு பின்னர் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் வெளியிட இயக்குநர் ராஜமெளலி திட்டமிட்டு இருந்த நிலையில், தியேட்டரில் டிரைலரை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே சமூக வலைதளங்களில் லீக் செய்ய உடனடியாக படக்குழு ஒரிஜினல் டிரைலரை வெளியிட்டுள்ளது. பான் இந்திய படமாக உருவாகி உள்ள இந்த பிரம்மாண்ட ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வரும் ஜனவரி 7ம் தேதி திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











