twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கார் ரேஸில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்… 14 பிரிவுகளில் போட்டியிடுவதாக படக்குழு அறிவிப்பு…

    |

    ஐதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்திருந்தனர்.

    இந்தப் படம் ஆஸ்கார் விருதுவிழாவில் போட்டியிடும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பொன்னியின் செல்வன் படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு.. ராஜமெளலி படங்களுக்கு இனி இங்கே ஆதரவு கிடைக்குமா? பொன்னியின் செல்வன் படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு.. ராஜமெளலி படங்களுக்கு இனி இங்கே ஆதரவு கிடைக்குமா?

    ராஜமெளலியின் பிரமாண்டம்

    ராஜமெளலியின் பிரமாண்டம்

    பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர் ஆகியோர் நடிப்பில், ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தின் 2 பாகங்களும் பிரமாண்ட வெற்றிப் பெற்றன. அதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கிய'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர், பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது.

    ஓடிடியிலும் தரமான சம்பவம்

    ஓடிடியிலும் தரமான சம்பவம்

    திரையரங்குகளில் மாஸ் காட்டிய ஆர்.ஆர்.ஆர், தொடர்ந்து ஓடிடி தளங்களிலும் வெளியானது. ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், ஜீ5 தளங்களில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு, ஓடிடி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 'பாகுபலி' படத்தை விடவும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கிடைத்த வரவேற்பு,, ராஜமெளலியின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கார் விருதுகளை வெல்லும் என ஹாலிவுட் முதல் பாலிவுட பிரபலங்கள் வரை பலரும் ஆரூடம் கூறியிருந்தனர்.

    இந்தியாவில் இருந்து தேர்வான செல்லோ ஷோ

    இந்தியாவில் இருந்து தேர்வான செல்லோ ஷோ

    ஆனால், இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் போட்டியில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பாக குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்யப்பப்பட்டுள்ளது. இதே பிரிவில் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் தேர்வாகாதது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது.. ஆர்ஆர்ஆர் படம் தேர்வு செய்யப்படாதது குறித்து பலரும் விமர்சனங்களை எழுப்பினர். மேலும், அனைத்து வகைகளிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை அகாடமி விருதுகளுக்குப் பரிசீலிக்க வெண்டும் எனக் கோரிக்கை வைத்து இருந்தனார்.

    படக்குழு எடுத்த அதிரடி முடிவு

    படக்குழு எடுத்த அதிரடி முடிவு

    இதனையடுத்து, RRR படத்தை ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறச் செய்ய, U.S வினியோகஸ்தர் சார்பில் மீண்டும் சமர்பிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் 10 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அகாடமி விருது குழுவிற்கு RRR படத்தை அனைத்து வகையான விருதுகளுக்கும் வாக்களிக்கப் பரிசீலிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சிறந்த படம், சிறந்த இயக்குநர், ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த முன்னணி நடிகர், சிறந்த துணை, சிறந்த துணை நடிகை என மொத்தம் 14 பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனையடுத்து பலரும் ஆர் ஆர் ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறனர்.

    English summary
    Rajamouli directs the RRR movie was a blockbuster hit. Ram Charan, Jr. NTR, Alia Bhatt, and others acted in this film. The makers are pushing the film into 14 categories under the For Your Consideration campaign.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X