பாகுபலி இயக்குநர் இஸ் பேக்.. தீயாய் தெறிக்கும் ராஜமெளலியின் RRR மேக்கிங் வீடியோ!
சென்னை: பாகுபலி எனும் பிரம்மாண்ட படைப்பை கொடுத்து ஹாலிவுட் திரையுலகையே அசந்து பார்க்க வைத்த இயக்குநர் ராஜமெளலியின் அடுத்த படைப்பான RRR படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.
ரோர் பண்ண ரெடியா என மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு தற்போது தீயாய் தெறிக்கும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.
ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி என ஏகப்பட்ட நடிகர்கள் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை காட்டுகின்றனர்.

பாகுபலி இயக்குநர் இஸ் பேக்
இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநராக மாறியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி. பாகுபலி படத்தை இயக்கி 1500 கோடி ரூபாய் வசூல் இந்திய படத்திற்கே சாத்தியம் என பாலிவுட் நடிகர்களை மிரள வைத்த ராஜமெளலி மீண்டும் தனது பிரம்மாண்டத்தை காட்ட தயாராகி விட்டார்.

ராம்சரண் படம்
டோலிவுட் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து அசத்தப் போகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், கோலிவுட்டை சேர்ந்த சமுத்திரகனியும் இந்த படத்தில் உள்ளார்.

ஹாலிவுட் லெவல் மேக்கிங்
இந்திய சுதந்திர போராட்டம் குறித்த மிகவும் பிரம்மாண்டமான படமாக ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகி உள்ளது. அதன் மேக்கிங் வீடியோவை பார்க்கும் போதே ஹாலிவுட் படத்திற்கு சற்றும் குறைவில்லாத தரத்துடன் படம் உருவாகி வருவது தெரிகிறது.
எப்போ ரிலீஸ்
மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு இந்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். வரும் அக்டோபர் 13ம் தேதி ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் திரையரங்குகள் திறக்கப்பட்டால் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து விடும்.


Click it and Unblock the Notifications











