ரெடி… ஸ்டார்ட்.. ஆக்ஷன்… ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு விரைவில் !

சென்னை : ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார்.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ராஜமௌலி

ராஜமௌலி

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்ட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று திரைப்படம்

வரலாற்று திரைப்படம்

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

10 மொழிகளில்

10 மொழிகளில்

ஆர்ஆர்ஆர் படத்தை ஒடிடியில் வெளியிடும் உரிமையை ஜீ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருந்தது. இந்நிலையில் இப்படத்தை ஆங்கிலம், போர்ச்சுகீஷ், கொரியா, ஸ்பானிஸ், துருக்கி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது.

விரைவில் ஷூட்டிங்

விரைவில் ஷூட்டிங்

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திராவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் படப்பிடிப்பை நடத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பை விரைந்து தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, ராஜமௌலி ஷூட்டிங்கை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X