அடேங்கப்பா...1000 கோடி வசூல்...சாதனைகளை அடித்து நொறுக்கிய 'ஆர்ஆர்ஆர்'

சென்னை : எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி வசூலை எட்டி உள்ளது. இதனை ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகிறது ஆர்ஆர்ஆர் படக்குழு.

டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் 5 மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 25 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை.

1000 கோடி கிளப்பில் ஆர்ஆர்ஆர்

1000 கோடி கிளப்பில் ஆர்ஆர்ஆர்


ரசிகர்கள், விமர்சகர்கள் என இரு தரப்பையும் கவர்ந்தததாக இந்த படம் அமைந்தது. படம் ரிலீசாகி 12 நாட்களிலேயே ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் 940 கோடிகளை தாண்டி உள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட்டான 500 கோடியையும் 10 நாட்களில் வசூல் செய்து விட்டனர். ஒரே வாரத்திலேயே பாகுபலி முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடித்த ஆர்ஆர்ஆர், தற்போது 1000 வசூலையும் எட்டி உள்ளது.

 இரண்டாவது இடத்தில் ஆர்ஆர்ஆர்

இரண்டாவது இடத்தில் ஆர்ஆர்ஆர்

இந்திய அளவில் இதுவரை ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படம் மட்டுமே 1800 கோடிகளை வசூல் செய்துள்ளது. மற்ற எந்த படமும் 1000 கோடி வசூலை தாண்டியதில்லை. தற்போது ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி வசூலை கடந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதனை கொண்டாட ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை பாலிவுட்டில் பஜ்ரங்கி பாய்ஜன் படம் தான் 915 கோடி வசூலுடன் இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. இந்த படத்தின் வசூலை தற்போது ஆர்ஆர்ஆர் கடந்து விட்டது.

கலெக்ஷன் கிங்கான ராஜமெளலி

கலெக்ஷன் கிங்கான ராஜமெளலி

இதுவரை இந்திய அளவில் 1000 கோடி வசூலை கடந்த இரண்டு படங்களும் ராஜமெளலி இயக்கிய படங்கள் தான். பாகுபலி 2 படம் மொத்தமாகவே 1800 கோடி தான் வசூல் செய்துள்ளது. ஆனால் ஆர்ஆர்ஆர் படம் 15 நாட்களிலேயே 1000 கோடியை தாண்டி விட்டதால், பாகுபலி 2 சாதனையை முறியடித்து, அதிக வசூல் சாதனை படைத்த படம் என பெருமையை பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்பனிங் நாளிலேயே சாதனை

ஓப்பனிங் நாளிலேயே சாதனை

கடந்த 13 நாட்களில் வெளிநாடுகளில் மட்டும் ஆர்ஆர்ஆர் படம் 528.50 கோடிகளை வசூல் செய்துள்ளது. ரிலீசான 15 நாட்களில் 1000 கோடி வசூல் என்ற மைல் கல்லை ஆர்ஆர்ஆர் படம் எட்டி உள்ளது. ஆர்ஆர்ஆர் படம் ரிலீசான முதல் நாளிலேயே 228.50 கோடிகளை வசூல் செய்து தென்னிந்தியாவிலேயே ஓப்பனிங் நாளில் அதிகம் வசூலித்த படம் என்ற பெயரை பெற்று விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X