400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராஜமெளலி படம்.. ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடிக்கு வியாபாரமா?

சென்னை: பாகுபலி படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நடத்திய வரலாற்று சாதனைகளால் இயக்குநர் ராஜமெளலியின் RRR படத்தை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்து இருக்கிறது.

வரும் மார்ச் 25ம் தேதி பான் இந்திய படமாக RRR வெளியாகிறது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் பெரும் தொகைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகதீரா டு பாகுபலி

மகதீரா டு பாகுபலி

2001ம் ஆண்டு வெளியான ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான ராஜமெளலி 2009ல் ராம்சரணை வைத்து இயக்கிய மகதீரா படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார். மகதீரா, நான் ஈ, பாகுபலி தி பிகினிங், பாகுபலி தி கன்க்ளூசன் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநராக மாறி உள்ளார்.

RRR

RRR

கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த RRR திரைப்படம் பல ரிலீஸ் தேதிகள் கொரோனா காரணமாக தள்ளி போக வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், இந்த மாதம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் லீடு ரோலில் நடித்துள்ளனர். நாயகியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார்.

சுதந்திர போராட்ட கதை

சுதந்திர போராட்ட கதை

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் சுதந்திர போராட்ட வீரர் சைரா நரசிம்ம ரெட்டியின் பயோபிக் வெளியான நிலையில், அதே போல சீதா ராமராஜுலு எனும் சுதந்திர போராட்ட வீரராக அவரது மகன் ராம்சரண் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.

பெரிய பிசினஸ் நடக்குமா

பெரிய பிசினஸ் நடக்குமா

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 2000 கோடிகள் வசூலை இந்திய அளவில் அள்ளியதாக கூறப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு RRR படத்தின் பிசினஸ் பெரிய அளவில் இருக்குமா? என்கிற கேள்வி சினிமா உலகில் எழுந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம் பிரம்மாண்ட விஷுவல்ஸ் இருந்தும் திரைக்கதை நன்றாக இல்லாததால் பெரும் பாக்ஸ் ஆபிஸ் இழப்பை சந்தித்த நிலையில், ராஜமெளலியின் படம் என்ன செய்யப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம்

சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம்

இந்நிலையில், படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் சுமார் 325 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக ஹாட் அப்டேட்கள் கிடைத்துள்ளன. படத்தின் பட்ஜெட்டை முக்கால்வாசி இந்த தொகையே கவர் செய்து விட்ட நிலையில், படத்தின் டிக்கெட் வசூல் எப்படி இருந்தாலும், பெரும் லாபம் என்றே கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X