twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    RRR ஒரு டிக்கெட் விலை 2,100 ரூபாயா? அதிர்ச்சியில் திரையுலகம்.. அங்கேயே அப்படின்னா?

    |

    சென்னை: இரண்டரை ஆண்டுகளாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் காத்திருந்த தருணம் நெருங்கி விட்டது.

    இன்று நள்ளிரவே ஆர்ஆர்ஆர் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் ஒரு பக்கம் சூடு பறக்க நடந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், பிவிஆர் மல்டிபிளக்ஸ் தியேட்டரில் RRR படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ.2,100 என்கிற தகவல் கசிந்து ஒட்டுமொத்த திரையுலகையும் ஷாக் ஆக்கி உள்ளது.

    “அஜித்62“ விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம்…ஷாக்கான ரசிகர்கள் !“அஜித்62“ விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம்…ஷாக்கான ரசிகர்கள் !

    பாக்ஸ் ஆபிஸ் பிரஸ்டிஜ்

    பாக்ஸ் ஆபிஸ் பிரஸ்டிஜ்

    பாகுபலி இரண்டாம் பாகத்தை விட ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை படைக்க வேண்டும் என மிகப்பெரிய புரமோஷன் ஏற்பாடுகளை இயக்குநர் ராஜமெளலி செய்துள்ளார். 250 கோடி பட்ஜெட்டில் உருவான பாகுபலி 2ம் பாகம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டிய நிலையில், 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் 3000 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

    2100 ரூபாயா

    2100 ரூபாயா

    ஆர்ஆர்ஆர் படத்திற்கு புக் மை ஷோவில் மட்டும் 2.5 மில்லியன் பேர் படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்திய சினிமாவிலேயே இதுதான் அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒரு பிவிஆர் தியேட்டரில் பாகுபலி 3டி பிளாட்டினம் சுப்பீரியர் சீட் ஒன்றின் டிக்கெட் விலை ரூ. 2,100 என்றும் 3டி பிளாட்டினம் டிக்கெட் விலை ரூ. 1,900 என்றும் போடப்பட்டிருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டை நெட்டிசன்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    மும்பையில் எவ்வளவு

    மும்பையில் எவ்வளவு

    தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் ஆர்ஆர்ஆர் படத்தின் டிக்கெட் விலை விண்ணை முட்டுகிறது. டெல்லியில் ரூ. 2,100க்கு ஒரு டிக்கெட் விற்கப்பட்டு வரும் நிலையில், மும்பையில் அதிகபட்சமாக ஒரு டிக்கெட் விலை ரூ. 1,720 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக தியேட்டரிலேயே இந்த அளவுக்கு டிக்கெட் விலை இருக்கிறதா என்பதை அறிந்தாலே தலை சுற்றுகிறது.

    சிறப்பு காட்சிக்கு எவ்வளவு

    சிறப்பு காட்சிக்கு எவ்வளவு

    டோலிவுட்டில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட உள்ளனர். இந்நிலையில், ரசிகர் மன்ற டிக்கெட் FDFSக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், முதல் 10 நாட்களுக்கு தியேட்டர்கள் எவ்வளவு விலை வேண்டுமானால் ஆர்ஆர்ஆர் படத்துக்கு நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வசூல் வந்திடுமே

    வசூல் வந்திடுமே

    இந்த அளவுக்கு டிக்கெட் விலை இருந்தால், முதல் நாளே இந்தியாவிலேயே 200 கோடி வசூலை படம் கடந்து விடுமே எனக் கூறுகின்றனர். மேலும், இத்தனை ஹைப்புக்கும் படம் வொர்த்தாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்களின் காசு வீணாகக் கூடாது என்றும் கூறுகின்றனர். ஒரு வாரத்திற்கு பிறகு எல்லா டிக்கெட் விலையும் குறைந்ததும் பொறுமையாக போய் படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

    பிரபலங்களை வைத்து புரமோஷன்

    பிரபலங்களை வைத்து புரமோஷன்

    இதுமட்டுமின்றி கடைசி பிரம்மாஸ்த்திரமாக ஒவ்வொரு மொழியில் இருந்தும் உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் வெளியானதும் படத்தை பாராட்டி ட்வீட் போடவும் ஏகப்பட்ட பணத்தை இரைத்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நாளை சோஷியல் மீடியா முழுக்க ஆர்ஆர்ஆர் திருவிழா தான் களைகட்டப் போகிறது.

    English summary
    SS Rajamouli’s RRR tickets sold for a whopping Rs 2,100 shocked the cinema industry. Delhi PVR Cinemas is charging this much for fans' screen shots trending on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X