twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகத்தை மிரட்ட வருகிறது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்... 10 மொழிகளில் வெளியாகிறது !

    |

    சென்னை : ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆங்கிலம், போர்ச்சுக்கள், கொரியா, ஸ்பானிஸ், துருக்கி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார்.

    பிளாக்பஸ்டர் ஹிட்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இந்த ஆண்டு மிகப்பெரிய வெப் தொடரே இதுதானாம்!பிளாக்பஸ்டர் ஹிட்.. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இந்த ஆண்டு மிகப்பெரிய வெப் தொடரே இதுதானாம்!

    சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஆர் ஆர்.ஆர்

    ஆர் ஆர்.ஆர்

    பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்ட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    வரலாற்று திரைப்படம்

    வரலாற்று திரைப்படம்

    சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையயமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    ஜூனியர் என்டிஆர்

    ஜூனியர் என்டிஆர்

    தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    Recommended Video

    பிரபல நடிகர் Ambulance Driver-ஆக மாறியுள்ளார் | Arjun Gowda
    பல மொழிகளில்

    பல மொழிகளில்

    ஜனவரி மாதமே திரைக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கொரொனா 2வது அலையின் தீவிரத்தால் வெளியாவது தள்ளிப்போய் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்படத்தை ஆங்கிலம், போர்ச்சுகீஷ், கொரியா, ஸ்பானிஸ், துருக்கிய ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜீ, நெட்பிளிக்ஸில்

    ஜீ, நெட்பிளிக்ஸில்

    ஆர்ஆர்ஆர் படத்தை ஒடிடியில் வெளியிடும் உரிமையை ஜீ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளன. தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னட மொழிகளில் ஜீ நிறுவனமும், இந்தியில் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வெளியிட உள்ளது. அதேபோல, ஆங்கிலம்,போர்ச்சுகீஷ்,கொரியா,ஸ்பானிஸ், துருக்கிய ஆகிய மொழிகளில் வெளியிட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    English summary
    SS Rajamouli's RRR to release in 10 languages
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X