3டியில் RRR பார்க்க ரெடியா மக்களே.. அனல் பறக்கும் புரமோஷன்.. பாக்ஸ் ஆபிஸில் சாதிப்பாரா ராஜமெளலி?

சென்னை: துபாய் மற்றும் இந்தியாவின் பல நகரங்களுக்கு பறந்து பறந்து RRR புரமோஷனை செய்து வருகிறார் இயக்குநர் ராஜமெளலி.

Recommended Video

நாட்டு நாட்டு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் போட்ட செம ஆட்டம்...அதுவும் யாருடன் தெரியுமா ?

பாகுபலி படத்தின் மூலம் படைத்த பாக்ஸ் ஆபிஸ் சாதனையை மீண்டும் படைக்க வேண்டும் என்கிற முனைப்புடன் கடுமையாக உழைத்து வருகிறார்.

ராஜமெளலியுடன் இணைந்து ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டு சிங்கங்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் அவருடன் இணைந்து அனைத்து விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

கர்நாடக முதல்வர் பங்கேற்பு

கர்நாடக முதல்வர் பங்கேற்பு

பெங்களூருவில் நேற்று நடந்த RRR படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை பாராட்டி பேசியிருந்தார். துபாயில் புரமோஷன் மற்றும் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராஜமெளலி

ஓய்வே இல்லை

ஓய்வே இல்லை

பாகுபலி படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்து அந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க வைத்த இயக்குநர் ராஜமெளலி அதை விட இரண்டு மடங்கு உழைப்பை தற்போது RRR படத்திற்கு போட்டுள்ளார். வரும் மார்ச் 25ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பட விழாவை நடத்த திட்டமிட்டு ஒவ்வொரு நகரத்திற்கும் விமானம் மூலம் பறந்து பறந்து புரமோஷன் செய்து வருகிறார்.

3டியில் RRR

3டியில் RRR

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி, ஓலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை 3டி தொழில் நுட்பத்திலும் உருவாக்கி உள்ளார் இயக்குநர் ராஜமெளலி. 3டி மற்றும் 2டி முறையில் தியேட்டரில் இந்த படம் வெளியாகும் என்கிற அட்டகாச அறிவிப்பை RRR படக்குழு அறிவித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வேட்டை

பாக்ஸ் ஆபிஸ் வேட்டை

பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகம் திரைப்படங்கள் 2000 கோடி வசூலுக்கும் அதிகமாக பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்திய நிலையில், ஒரே பார்ட் கொண்ட RRR படத்தின் மீது ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது. டோலிவுட்டின் இரு டாப் நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில், இந்த படம் எதிர்பார்த்த பாக்ஸ் ஆபிஸை பெறும் என ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ரிப்போர்ட்டுகள் தகவல் தெரிவித்துள்ளன.

புக்கிங் ஆரம்பம்

புக்கிங் ஆரம்பம்

வரும் மார்ச் 23ம் தேதி வரை இடைவிடாமல் படத்தை புரமோட் செய்ய ராஜமெளலி முழு வேகத்தில் ஆயத்தமாகி உள்ளார். இந்நிலையில், டோலிவுட்டில் பல இடங்களில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு புக்கிங் ஓப்பன் செய்யப்பட்டு விட்டதாகவும், ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிக் குவிக்கும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X