மகனுக்கு வில்லன் வீட்டில் பெண் எடுத்துள்ள இயக்குனர் ராஜமவுலி
ஹைதராபாத்: இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயாவுக்கும், அவரது காதலி பூஜாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா பூஜா பிரசாத் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இது குறித்து அறிந்த ராஜமவுலி மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
மகன் காதலித்த பெண்ணையே அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார் ராஜமவுலி.

மகன்
மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பா நான் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் ராஜமவுலி. அவரின் மகன் கார்த்திகேயாவுக்கும், பூஜா பிரசாத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ராஜமவுலியின் வீட்டில் வைத்து நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவருக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

பூஜா பிரசாத்
நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணம் எப்பொழுது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. பூஜா பிரசாத் ஒரு பிரபலமான பாடகி. அவர் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். தெலுங்கில் வில்லன் வேடத்தில் மிரட்டி வரும் ஜகபதி பாபுவின் சகோதரர் ராம் பிரசாத்தின் மகள் தான் இந்த பூஜா. மூத்த தயாரிப்பாளர் வி.பி. ராஜேந்திர பிரசாத்தின் பேத்தி ஆவார்.
கார்த்திகேயா
தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அடுத்து பூஜாவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் கார்த்திகேயா.

அகில்
நாகர்ஜுனா, அமலாவின் மகனான அகில் அகினேனி தனது நெருங்கிய நண்பரான கார்த்திகேயாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவர்களை வாழ்த்தியுள்ளார். முன்னதாக அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











