twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரியான கதை இருந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவேன்... சென்னை பிரஸ்மீட்டில் இயக்குநர் ராஜமவுலி!

    |

    சென்னை: சரியான கதை இருந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்குவேன் என இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

    எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

    மிரட்டல் ராம்...மிரள வைக்கும் பீம்...ஆர்ஆர்ஆர் போஸ்டர்கள் வெளியீடு மிரட்டல் ராம்...மிரள வைக்கும் பீம்...ஆர்ஆர்ஆர் போஸ்டர்கள் வெளியீடு

    மெய் சிலிர்க்க வைத்த ட்ரெய்லர்

    மெய் சிலிர்க்க வைத்த ட்ரெய்லர்

    ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று முன்தினம் ரிலீஸ் செய்யப்பட்டது. மிரட்டல் சண்டைக் காட்சிகளுடன் மெய் சிலிர்க்க வைத்தது ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரெயிலர்.

    பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்

    பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்

    இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் , ஸ்ரேயா சரண் , சமுத்திரக்கனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆரின் நண்பராக இருப்பது ட்ரெய்லரில் தெரியவந்துள்ளது. பாகுபலி படத்தில் இடம்பெற்றதை போன்றே ஆர்ஆர்ஆர் படத்திலும் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    நான்கு வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறேன்

    நான்கு வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறேன்

    இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினரின் பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் ராஜமவுலி பேசியதாவது:
    நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன்.

    நம் நடிகர்களே திறமையானவர்கள்தான்

    நம் நடிகர்களே திறமையானவர்கள்தான்

    அதனால் அரசியல் பேச வேண்டாம், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் குறித்து மட்டும் பேசுவோம். சென்னை வரும்போது பள்ளி மாணவனைப் போல் உணர்கிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளிக்கூடம். அனைத்தையும் கற்றுக் கொடுத்தது என்று கூறினார். மேலும் ஏன் ஹாலிவுட் நடிகர்களை படமெடுக்க வேண்டும்? நம் நடிகர்களே மிகவும் திறமையானவர்கள்தான். நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம்.

    ஸ்க்ரிப்ட் இருந்தால் ரஜினியை இயக்குவேன்

    ஸ்க்ரிப்ட் இருந்தால் ரஜினியை இயக்குவேன்

    தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன். ஸ்க்ரிப்ட் இருந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவேன் என்றும் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தெரிவித்தார். மேலும் பாகுபலியைப் போன்றே ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும் என தெரிவித்தார்.

    தமிழ் என் இரண்டாவது தாய் மொழி

    தமிழ் என் இரண்டாவது தாய் மொழி

    இதேபோல் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆலியா பட் ஆகியோரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது பேசிய ராம் சரண், தான் சென்னை அண்ணா நகரில் பிறந்ததால் சென்னை எப்போதும் என் இரண்டாவது வீடு என்றார். மேலும் தமிழ் எப்போதும் தன்னுடைய இரண்டாவது தாய் மொழி என்றும் கூறினார் ராம் சரண்.

    தமிழில் ஆரம்பித்த ஜூனியர் என்டிஆர்

    தமிழில் ஆரம்பித்த ஜூனியர் என்டிஆர்

    தமிழில் முழுக்க நாங்களே டப் செய்துள்ளோம். டப் செய்யும் போது அவ்ளோ என்ஜாய் பண்ணினேன் என்றார். தெலுங்கு மொழிக்கு பிறகு தமிழில் தான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். ஜூனியர் என்டிஆர் பேசத் தொடங்கும் போது எல்லோருக்கும் வணக்கம் என தமிழில் ஆரம்பிரத்தார். இதனைக் கேட்ட பார்வையாளர்கள் கரகோஷத்தால் அரங்கை அதிர வைத்தனர்.

    English summary
    SS Rajamouli says if he has a script he will direct Super Star Rajinikanth. RRR movie team press meet held in Chennai last night.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X