என்னோட 20 வருஷ சினிமா அனுபவத்துல இப்படியொரு நடிகனை பார்க்கல.. ராம்சரணை பாராட்டிய ராஜமெளலி!

சென்னை: ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 3டியில் வரும் மார்ச் 25ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சியுடனே வெளியாகும் என்கிற அறிவிப்பு வரை வந்து விட்டது.

Recommended Video

என் கடைசி மூச்சு வரைக்கும்!! RAM CHARAN EMOTINAL Speech in RRR grand Pre-Release event

சமீபத்தில் துபாயில் பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் விழாவை நடத்திய ராஜமெளலி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் படத்தின் புரமோஷனை அனல் பறக்க செய்து வருகிறார்.

குஜராத், அம்ரித்சரஸ், கர்நாடகா என பல்வேறு இடங்களுக்கு பறந்து பறந்து விளம்பரம் செய்து வரும் நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ராம்சரண் குறித்து ராஜமெளலி பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மெகாஸ்டார் மகன்

மெகாஸ்டார் மகன்

டோலிவுட்டின் மெகாஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் தான் ராம்சரண். தந்தை 8 அடி பாய்ந்தால் இவர் ராஜமெளலியுடன் இணைந்து 80 அடி பாய்ந்து வருகிறார். மகதீரா படத்தில் இணைந்து நடித்த நிலையில் மீண்டும் ராஜமெளலியுடன் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வரும் மார்ச் 25ம் தேதி வெளியாகிறது.

60 நாடுகளில்

60 நாடுகளில்

இதுவரை எந்தவொரு இந்திய படமும் வெளியாகாத அளவுக்கு சுமார் 60 நாட்களில் RRR திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் 10 நாட்களுக்கு தியேட்டர் ஓனர்கள் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என டோலிவுட்டில் க்ரீன் சிக்னல் காட்டிய நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை டார்கெட் செய்திருக்கிறார் ராஜமெளலி.

3000 கோடி வசூல்

3000 கோடி வசூல்

பாகுபலி படங்கள் 2000 கோடி வசூலை கடந்து இந்திய மார்க்கெட்டை உலக அரங்கில் கொண்டு போய் சேர்த்த நிலையி,ல் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் 3000 கோடி வரை வரும் என படத்திற்கு டிஐ செய்த கலரிஸ்ட்டே போட்ட ட்வீட் இந்திய ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 3டியில் படம் வெளியாக உள்ள நிலையில், அனைத்து குட்டி சுட்டீஸையும் பெற்றோர்கள் தியேட்டருக்கு கூட்டிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரண் போல

ராம்சரண் போல

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குநர் ராஜமெளலி தன்னுடைய 20 வருட சினிமா அனுபவத்தில் ராம்சரண் போன்ற ஒரு நடிகரை சந்தித்ததே கிடையாது எனக் கூறியிருப்பது மெகா பவர் ஸ்டார் ராம்சரண் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்று இருக்கிறது.

ஒயிட் கேன்வாஸ்

ஒயிட் கேன்வாஸ்

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்போது வந்தாலும் வெள்ளை நிற கேன்வாஸ் போலவே வருவார் ராம்சரண். நான் ஒரு ஒயிட் கேன்வாஸ் என்னுள் எப்படி வேண்டுமானாலும் வண்ணம் தீட்டிக் கொள்ளுங்கள் என முழுமையாக தன்னை அர்ப்பணித்து விடும் அந்த இயல்பான நடிகனை இதுவரை தான் சந்தித்ததே இல்லை என பாராட்டி உள்ளார் ராஜமெளலி.

ஷங்கர் இயக்கத்தில்

ஷங்கர் இயக்கத்தில்

ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும் நிலையில், அடுத்ததாக தந்தை சிரஞ்சீவியுடன் ராம்சரண் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. அதனை அடுத்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்து வரும் அரசியல் படம் ரிலீசாக போகிறது. ராஜமெளலி, ஷங்கர் என இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர்களுடன் ராம்சரண் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X