பிம்பிலிக்கா பிலாப்பி.. மகேஷ் பாபு பிறந்தநாள்.. ரசிகர்களை ஏமாற்றிய ராஜமெளலி.. இப்போ என்ன ஆச்சுன்னா?

ஹைதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வருகிறார் என்பது உலகத்துக்கே தெரியும். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிப்பாக அந்த படத்தின் அதிரடியான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எந்தவொரு அப்டேட்டும் கிடைக்காது என ராஜமெளலி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

சமீபத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் வெளியானது. துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசரும் வெளியானது. முன்னணி நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படி ஏதாவது அந்த படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் என ஏதாவது ஒரு அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடுவது வழக்கம்.

SS Rajamouli says there is no movie update on Mahesh Babu birthday today upsets fans
Photo Credit:

ரசிகர்களுக்கும் நடிகரின் பிறந்தநாளை கொண்டாட அந்த பட அப்டேட்கள் ஒரு பெரிய சாக்காக அமையும். ஆனால், மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கண்டிப்பாக ராஜமெளலி படத்தின் அப்டேட் வரும் என சில நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ராஜமெளலியின் போஸ்ட் கொடுத்துள்ளது.

மகேஷ் பாபு 50வது பிறந்தநாள்: 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணாவுக்கு மகனாக பிறந்த மகேஷ் பாபு இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமான வருடத்தில் தான் மகேஷ் பாபு சென்னையில் பிறந்தார். லயோலா கல்லூரியில் பட்டம் பெற்ற மகேஷ் பாபு டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராகவே தனது கடும் உழைப்பால் முன்னேறியுள்ளார். மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்குகளில் அத்தாடு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

ஏமாற்றிய ராஜமெளலி: மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருப்பீங்கன்னு தெரியும். உலகளவிலான சினிமா ரசிகர்களும் என்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என வெயிட் பண்ணிட்டு இருந்தால், ரொம்பவே ஸாரி இன்று எந்தவொரு அப்டேட்டும் வராது என்றும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகம் இதுவரை கண்டிராத ஒரு அட்டகாசமான அப்டேட் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

அட்லீஸ்ட் டைட்டில்: மகேஷ் பாபுவின் ஃபர்ஸ்ட் லுக் தான் வெளியிடவில்லை என்றாலும் அட்லீஸ்ட் படத்தின் டைட்டிலையாவது ராஜமெளலி சொல்லியிருக்கலாம் என ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகி கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். எப்படி இருந்தாலும், வெயிட் பண்றதுக்கு வொர்த்தான தரமான பான் வேர்ல்ட் சம்பவத்தை பாகுபலி இயக்குநர் செய்வார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. Globe Trotter என புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ள நிலையில், படத்தின் டைட்டிலே இதுதானா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர்: சில மகேஷ் பாபு ரசிகர்கள் GROK-இடம் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் யார் என்று கேட்க, அது மாற்றுக் கருத்தே இல்லாமல் ராஜமெளலி தான் என அடுத்த நொடியே பதில் அளித்துள்ளது. மேலும், இந்தியாவின் டாப் 10 இயக்குநர்கள் பட்டியலில் ராஜமெளலியை அடுத்து சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி, அட்லி, சந்தீப் ரெட்டி வங்கா, மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X