எடுப்பான அழகுடன்.. துடிப்பான சீதா.. அசத்திய ஆலியா பட்!

சென்னை : பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிவரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

 ஆர்.ஆர்.ஆர்.

ஆர்.ஆர்.ஆர்.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின்ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

 வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

 ராம் சரண் , ஜூனியர் என்.டிஆர்

ராம் சரண் , ஜூனியர் என்.டிஆர்

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 தசரா பண்டிகையின் போது

தசரா பண்டிகையின் போது

ஜனவரி மாதமே திரைக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதால் திரைப்படம் வெளியாவது தள்ளிப்போனது. தற்போது இத்திரைப்படம் தசரா பண்டிகையின் போது திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ட்விட்டரில்

இப்படத்தின் இறுதிக்கட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தில் ஆலியா பட் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆலியாபட்டின் 28வது பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் ராஜமௌலி புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆலியா பட் குத்தவைத்து உட்கார்ந்தவாரு சோகமே உருவான முகத்துடன் அப்படியே பார்ப்பதற்கு சீதாவைப்போல் இருக்கிறார். ஆலியா பட்டின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X