Don't Miss!
- News
கார்த்தி சிதம்பரம் அதிரடி மூவ்.. "பொய் வழக்கு போட்டு என் குரலை முடக்க சதி" - சபாநாயகருக்கு கடிதம்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தவறான முடிவெடுத்துத்துட்டு உட்கார்ந்து அழுவாங்களாம்... உங்க ராசி என்ன?
- Sports
செஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனை
- Technology
டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பவன் கல்யாணுக்கும் மகேஷ் பாபுவுக்கும் இருக்கும் பெரிய மனசு பிரபாஸுக்கு இல்லையா?
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் எனும் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்திற்காக டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மிகப்பெரிய உதவி செய்துள்ளனர்.
மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் செய்த அந்த உதவிக்காக தற்போது இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 7ம் தேதி ராஜமெளலியின் பிரம்மாண்ட திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரத்தம் ரணம் ரெளத்திரம்
RRR என்ற டைட்டில் உடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்குநர் ராஜமெளலியின் திரைப்படம் தமிழில் இரத்தம் ரணம் ரெளத்திரம் என்றும் ஒவ்வொரு மொழிகளிலும் RRRக்கு ஏற்ற அர்த்தத்துடன் வெளியாகிறது. வரும் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகி மிரட்ட காத்திருக்கிறது.

பாகுபலியை பீட் பண்ணுமா
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பிரம்மாண்ட திரைப்படமான இரத்தம் ரணம் ரெளத்திரம் திரைப்படம் வசூலில் ராஜமெளலியின் முந்தைய படங்களான பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராமாயணமும் மகாபாரதமும்
புராண கதையை மையமாக வைத்து படங்களை உருவாக்குவது இயக்குநர் ராஜமெளலிக்கு மிகவும் பிடித்த விசயம். ஆனால், இந்த முறை சுதந்திர போராட்ட கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. ஆனாலும், ராம் என ராம்சரணையும் பீம் என தாரக்கையும் நடிக்க வைத்து ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் மறைமுகமாக மிக்ஸ் செய்துள்ளார் ராஜமெளலி.

விட்டுக் கொடுத்த நடிகர்கள்
தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் உள்ளனர். மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாணுக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸ் உள்ளது. வரும் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா மற்றும் பவன் கல்யாணின் பீம்லா நாயக் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்துடன் கிளாஷ் வேண்டாம் என அவர்கள் இருவருமே விட்டுக் கொடுத்துள்ளனர்.

ராஜமெளலி நன்றி
இந்நிலையில், தங்களின் கோரிக்கையை ஏற்று ரிலீஸை தள்ளி வைத்து ஆர்.ஆர்.ஆர் படம் வசூல் ரீதியாக பெரிய பாதிப்பை சந்திக்காத அளவுக்கு எங்களுக்கு மூச்சு விட நேரம் கொடுத்த மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகிய இருவருக்கும் நன்றி என இயக்குநர் ராஜமெளலி நன்றி கூறியுள்ளார். இதற்கு பேர் தான் தன்னடக்கம் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

மோதும் பிரபாஸ்
ஆனால், ராஜமெளலியின் பாகுபலி படங்கள் மூலம் பான் இந்திய நடிகராக உயர்ந்த நடிகர் பிரபாஸ் மட்டும் இந்த சங்கராந்தி போட்டியில் இருந்து விலகவில்லை. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 2022ம் ஆண்டு ஜனவரிக்கு ஆர்.ஆர்.ஆர் மற்றும் ராதே ஷ்யாம் படங்களுக்கு மத்தியில் தான் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.