twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் சிவசங்கர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

    |

    சென்னை: தேசிய விருது பெற்ற பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72.

    கொரோனா பாதித்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சைக்காக நிதி தேவைப்படுவதாக அவரது மகன் பிரபலங்களிடம் கோரிக்கை வைத்தார்.

    பாலிவுட் நடிகர் சோனு சூட், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் உதவ முன் வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

    சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

    சிவசங்கர் மாஸ்டர் காலமானார்

    கொரோனா பாதிப்பு காரணமாக 72 வயதான பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமான சூழலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் உயிர் பிரிந்தது.

    தேசிய விருது

    தேசிய விருது

    திருடா திருடி படத்தின் மன்மதராசா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் நடனம் அமைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 800க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார் சிவசங்கர் மாஸ்டர். ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்த மகதீரா படத்தின் பாடலுக்கு அவர் நடனம் அமைத்த நிலையில் சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    சோனு சூட் இரங்கல்

    சோனு சூட் இரங்கல்

    இதயமே நொறுங்கிப் போய்விட்டது என நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சிவசங்கர் மாஸ்டரை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் செய்தோம். ஆனால், கடவுள் வேறு ஒரு பிளான் வைத்திருக்கிறார். அவரது மறைவு சினிமாவுக்கே மிகப்பெரிய இழப்பு என நடிகர் சோனு சூட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் நவீன் இரங்கல்

    இயக்குநர் நவீன் இரங்கல்

    "சினிமாவில் ஒரு உதவி இயக்குநனாக என் முதல் படம், முதல் நாள் ஷூட்டிங் என்பது 23ஆம் புலிகேசி படத்தில் 'ஆடிவா பாடிவா' பாடல் படப்பிடிப்பு. சிவசங்கர் மாஸ்டர் ஒரு யுனிக் பர்சனாலிட்டி. பல நினைவுகள். சென்று வாருங்கள் மாஸ்டர்" என தனது நினைவுகளை பகிர்ந்து மூடர்கூடம் இயக்குநர் நவீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ராஜமெளலி இரங்கல்

    ராஜமெளலி இரங்கல்

    மகதீரா படத்தில் மாஸ்டர் சிவசங்கர் உடன் பணியாற்றிய நினைவுகள் இன்னமும் அப்படியே மறக்காமல் என் நினைவில் வலம் வருகிறது. அவருடைய இந்த மறைவு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பிரசன்னா இரங்கல்

    பிரசன்னா இரங்கல்

    நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு கோலிவுட், டோலிவுட் என பல சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவார் என பிரபலங்கள் பிரார்த்தனை செய்த நிலையில், அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் பிரசன்னா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கஸ்தூரி இரங்கல்

    கஸ்தூரி இரங்கல்

    நமக்கு மிகவும் பிடித்த சிவசங்கர் மாஸ்டர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார். கோவிட் எனும் கொடிய அரக்கன் சினிமா பிரபலங்கள் பலரது உயிரை குடித்து வருகிறான். கடவுள்களுக்கு நடனமாடி காட்ட மாஸ்டர் மேல் உலகம் சென்று விட்டார். தனுஷ் மற்றும் சோனு சூட் உதவ முன்வந்ததாக கேள்வி பட்டேன் ஆனாலும், மாஸ்டரை காப்பாற்ற முடியவில்லையே என நடிகை கஸ்தூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சாந்தனு இரங்கல்

    சாந்தனு இரங்கல்

    நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் சிவசங்கர் மாஸ்டரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனா குறைந்து விட்டது என யாரும் பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்ல வேண்டாம். தடுப்பூசி அவசியம் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்.

    English summary
    Cinema Celebrities like SS Rajamouli, Manobala, Prasanna, Sonu Sood and more says condolence for Shiva Shankar Master demise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X