Jawan - பிரமாண்ட இயக்குநரையே பிரமிப்பில் ஆழ்த்திய ஜவான்.. என்ன சொல்லிருக்கார் பாருங்க..

சென்னை: Jawan (ஜவான்) ஜவான் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ராஜமௌலி போட்டிருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழில் நான்கு படங்களை இயக்கிய ஐந்தாவதாக ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட்டில் அட்லீ கொடுத்திருக்கும் முதல் பட எண்ட்ரியே ஷாருக்கானுடன் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ரொம்பவே அதிகரித்தது. அட்லீ மட்டுமின்றி தமிழிலிருந்து நயன்தாரா, அனிருத் ஆகியோரும் பாலிவுட்டுக்கு சென்றிருக்கின்றனர்.

SS Rajamouli Tweet about Atlees Jawan Movie Huge Success

ஜவான் ரிலீஸ்: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜவான் கடந்த ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்னர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் மெகா ஹிட்டானது. எனவே இதுவும் அந்தப் படம் போல் கண்டிப்பாக மெக ஹிட்டாகும் என்ற நம்பிக்கையோடு தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்தனர்.

எப்படி இருக்கிறது படம்: படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சி முடிவில் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்தனர். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் வர ஆரம்பித்தது. குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்கள் படத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஒரு படத்தின் டிக்கெட் விலைக்கு பல படங்களை காட்டியிருக்கிறார் அட்லீ. அவ்வளவும் காப்பி கேட்தான் என கூறிவருகின்றனர்.

வசூலில் மாஸ்: விமர்சன ரீதியாக இப்படி அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிவருகிறது. முதல் நாள் 130 கோடி ரூபாயை வசூலித்த ஜவான் இரண்டாவது நாளில் 110 கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் முதல் இரண்டு நாட்களிலேயே 200 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டது. அதேபோல் மூன்றாவது நாளான நேற்றும் 100 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மூன்றே நாட்களில் 200 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்த முதல் ஹிந்தி படம் என்ற பெருமையை ஜவான் பெற்றிருக்கிறது.

ராஜமௌலி ட்வீட்: இந்நிலையில் ஜவான் படம் குறித்து பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஷாருக்கானை எல்லோரும் பாஸ் ஆஃபிஸின் பாட்ஷா என்று இதனால்தான் சொல்கிறார்கள். பூமி அதிரும் ஓபனிங் இது. வடக்கிலும் வெற்றியை தொடரும் இயக்குநர் அட்லீக்கு வாழ்த்துகள். மிகப்பெரிய வெற்றி பெற்றமைக்கு ஜவான் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X