twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவல்துறையை கௌரவிக்க குறும்படம் … இயக்குனர் யார் தெரியுமா!

    |

    சென்னை : இயக்குனர் ராஜமௌலி 20நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் .

    இந்த வயசுலேயே இப்டியா.. பாபநாசம் குட்டி பாப்பாவின் போட்டோவை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்! இந்த வயசுலேயே இப்டியா.. பாபநாசம் குட்டி பாப்பாவின் போட்டோவை பார்த்து பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

    ஆர்ஆர்ஆர் படப்பிடிப்புக்கு தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு குறும்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆர் ஆர்.ஆர்

    ஆர் ஆர்.ஆர்

    பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்ட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    வரலாற்று படம்

    வரலாற்று படம்

    சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையயமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    ஜூனியர் என்டிஆர்

    ஜூனியர் என்டிஆர்

    தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    காவல்துறையை கௌரவிக்க

    காவல்துறையை கௌரவிக்க

    இந்நிலையில் எஸ்.எஸ் ராஜமௌலி ஒரு குறும்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் பணி மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. எனவே காவல்துறைறையை கௌரவிக்கு வகையில் 20 நிமிடம் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுப்படுத்தப்படவில்லை.

    English summary
    SS Rajamouli will direct a short film soon
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X