Don't Miss!
- News
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தீவிரம்: எஸ்டேட் மேனேஜரின் நண்பர் உட்பட 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்!
- Sports
உம்ரான் மாலிக்கை சுற்றிய மத சர்ச்சை.. ஹோட்டல் வீடியோவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன ஆனது??
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Finance
அதானி பங்குகள் சரிவு.. எல்லாம் 'அவங்க' பாத்துப்பாங்க.. நிர்மலா சீதாராமன் பதில்..!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கண்டுக்காத ரஜினி.. ராஜமெளலிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த கமல்.. திடீர் சந்திப்பு வேற நடந்திருக்காம்!
சென்னை: இந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், தனது அடுத்தடுத்த படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் உலக நாயகன்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் வரும் சம்மருக்குள் படம் மொத்தமும் ரெடியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட இயக்குநரான ராஜமெளலியின் படத்தில் கமல் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோகேஷ்
ஹிட்
லிஸ்ட்டில்
சியான்
விக்ரம்,
ராகவா
லாரன்ஸ்...
அடுத்தடுத்து
அரங்கேறும்
சீக்ரெட்
மிஷன்ஸ்

ரஜினியை இயக்க ஆசைப்பட்ட ராஜமெளலி
நான் ஈ, மகதீரா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்களை இயக்கி உலகளவில் பல ஹாலிவுட் இயக்குநர்களையே மிரள வைத்துள்ள இயக்குநர் ராஜமெளலி தான் ரஜினியை வைத்து படம் இயக்கினால் முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை விசில் சத்தம் விண்ணை பிளக்கும் என தொடர்ந்து தனது பேட்டிகளில் கூறி வருகிறார் ராஜமெளலி.

கண்டுக்காத ரஜினி
இயக்குநர் ஷங்கரின் எந்திரன், 2.0 படங்களிலேயே படாத பாடு பட்ட நடிகர் ரஜினிகாந்த் இனிமேல் பிரம்மாண்ட இயக்குநர்கள் படங்களில் கமிட் ஆக வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்து தான் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் என இளம் இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார். ராஜமெளலிக்கு வாய்ப்பே அவர் வழங்கவில்லை.

கமல் க்ரீன் சிக்னல்
மகேஷ் பாபுவின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை நடிக்க வைத்து விடலாம் என இயக்குநர் ராஜமெளலி கேட்ட போது கமல் யோசித்த நிலையில், தற்போது புதிய படம் ஒன்றையே கமல்ஹாசனை வைத்து இயக்குநர் ராஜமெளலி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகேஷ் பாபுவின் படத்தை முடித்து விட்டு இந்த படத்தை ராஜமெளலி இயக்குவார் என்றும் தெலுங்கு திரையுலகில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கடந்த வாரம் இதுதொடர்பாக ராஜமெளலி மற்றும் கமல் இடையே ஒரு ரகசிய சந்திப்பும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிரம்மாண்ட இயக்குநர்கள்
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தை முடித்து விட்டு ராஜமெளலி படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் 3 படமும் லைன் அப்பில் இருக்கிறது.

பிக் பாஸுக்கு முழுக்கு
அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க உள்ள நிலையில், இந்த சீசனுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விலகிக் கொள்ளவும் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஜனவரி மாதத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய உள்ள நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2 முதல் புதிய ஹோஸ்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.