Varanasi: ஏற்கனவே லீக்கான அதே டைட்டில் தான்.. மாடு மேல மகேஷ் பாபு.. ராஜமெளலியின் ‘வாரணாசி’!
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலி ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை வைத்து இயக்கி வரும் படத்திற்கு 'வாரணாசி' என டைட்டில் வைத்துள்ளார். ஏற்கனவே மகேஷ் பாபு படத்தின் டைட்டில் வாரணாசி தான் என்பது ஒரு வாரத்துக்கு முன்பே லீக்கான நிலையில், இன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எந்தவொரு மாற்றமும் இன்றி அதே டைட்டிலை அறிவித்துள்ளனர்.
மகேஷ் பாபு சிவனை போல காளை மாட்டின் மீது ஏறி சவாரி செய்த வாறு கையில் சூலத்தையும் ஏந்திக் கொண்டு ரொம்பவே ஆக்கிரோஷமாக வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியின் பெரிய திரைகளில் வெளியானது.

அதனை படம்பிடித்த ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியா முழுக்க வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
ராஜமெளலியின் வாரணாசி: கும்பா என வில்லனுக்கு பெயர் வைத்த நிலையிலேயே படத்தின் டைட்டில் வாரணாசியாகத்தான் இருக்கும் என லீக்காகி விட்டது. ஹீரோயின் பிரியங்கா சோப்ராவை மஞ்சள் நிற புடவையில் கையில் துப்பாக்கியை கொடுத்து மந்தாகினியாக அறிமுகப்படுத்திய ராஜமெளலி தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் வாரணாசி தான் என்பதை அறிவித்துள்ளார்.
மாடு மேல மகேஷ் பாபு: சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 படத்தில் நந்தி பகவான், நாகம், திரிசூலத்துடன் சிவனாகவே ரிஷப் ஷெட்டி மாறியிருந்தார். இந்நிலையில், மாடு மேல மகேஷ் பாபு சவாரி செய்துக் கொண்டு கையில் சூலத்துடன் சிவனாகவே காட்சி தரும் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் காட்சிகள் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
கையெடுத்துக் கும்பிடும் ரசிகர்கள்: கும்பமேளா கூட்டத்திற்கு சென்றது போல மகேஷ் பாபுவின் தரிசனத்தை பார்த்த ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் மகேஷ் பாபு படத்தை பற்றி என்ன பேசப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











