ஓணம் திருநாளில் அருந்ததிக்கு அம்மாவான நெடுஞ்சாலை நடிகை ஷிவதா

சென்னை: நெடுஞ்சாலை நடிகை அம்மாவாகியுள்ளார். ஓணம் திருநாளில் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஷிவதா. அழகிய பெண் குழந்தைக்கு தாயான ஷிவதா, தன்னுடைய குழந்தைக்கு அருந்ததி என்று பெயர் வைத்துள்ளார். ஒணம் பண்டிகை தினத்தில் இந்த நற்செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஷிவதா.

கேரளத்து பெண்குட்டியான ஷிவதா என்னும் ஸ்ரீலேகா நாயர் தென்னிந்திய படங்களின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

Sshivada, mother of girl child on Onam day

ஒரு நடன கலைஞராகவும் வீடியோ ஜாக்கியாகவும் பணிபுரிந்த ஷிவதாவை லிவிங் டுகெதர் எனும் மலையாள திரைப்படம் மூலம் 2011ஆம் ஆண்டு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாசில். அதற்கு முன்னர் ஒரு அந்தாலஜி திரைப்படமான கேரளா கஃபே எனும் மலையாள படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பின்னர் 2015ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஷிவதா. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கண்கள், ஸீரோ எனும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே, முரளிகிருஷ்ணன் என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். இறுதியில் காதல் கனிந்து 2015ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்த நிலையில் சிறுது காலம் எந்த ஒரு தகவலும் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

அவருடைய வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது நற்செய்தி ஒன்றை ஓணம் பண்டிகையன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ஷிவதா. அவர் ஒரு அழகிய பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார் என்பது தான் அந்த நற்செய்தி. தன் குழந்தைக்கு அருந்ததி என்று பெயர் சூட்டியுள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் அனைவர்க்கும் ஓணம் நல்வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

மேலும் மாயா திரைப்படம் மூலம் பிரபலமான இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் வாமிகா கப்பி ஆகியோருடன் நடிக்க மார்ச் 2017ஆம் ஆண்டில் கையெழுத்திட்டுள்ளார். எனவே கூடிய விரைவில் ஷிவதாவை நாம் திரைப்படங்களில் காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X