SSMB28 டைட்டிலை வெளியிடும் சூப்பர் ஃபேன்ஸ்... மகேஷ் பாபு கொடுத்த ஸ்மார்ட் சர்ப்ரைஸ்!

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது 28வது படத்தில் நடித்து வருகிறார்.

SSMB 28 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை திரிவிக்ரம் இயக்கி வருகிறார்.

மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் SSMB 28 இந்தாண்டு ஏப்ரலில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது புதிய ரிலீஸ் தேதியுடன், SSMB 28 டைட்டில் குறித்த அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

 SSMB 28: Mahesh Babus SSMB 28 Title will unveil by Super fans on 31st May

SSMB28 டைட்டிலை வெளியிடும் சூப்பர் பேன்ஸ்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மகேஷ் பாபு, தற்போது தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். திரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் தயாரித்து வருகிறது. மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு, திரிவிக்ரம் இருவருமே தெலுங்கில் மாஸ் கூட்டணியாக கலக்கி வருகின்றனர். ஏற்கனவே அத்தாடு, கலேஜா படங்கள் மூலம் மாஸ் காட்டிய மகேஷ்பாபு, திரிவிக்ரம் மீண்டும் மூன்றாவது முறையாக அதிரடி காட்டவுள்ளனர். இந்தப் படம் பற்றிய அப்டேட் வெளியானது முதலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், SSMB 28 படத்தை இந்தாண்டு ஏப்ரலில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், மகேஷ்பாபுவின் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் SSMB 28 படப்பிடிப்பு தாமதமானது. இதனையடுத்து கடந்த சில தினங்களாக SSMB 28 படப்பிடிப்பில் பிஸியான மகேஷ் பாபு, தற்போது அடுத்தடுத்து இரண்டு அப்டேட்களை வெளியிட்டு அமர்க்களம் செய்துள்ளார். அதன்படி, SSMB 28 திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது.

 SSMB 28: Mahesh Babus SSMB 28 Title will unveil by Super fans on 31st May

அதேபோல், SSMB 28 டைட்டில் குறித்தும் தற்போது அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த அப்டேட்டின் படி SSMB 28 டைட்டில் வரும் (மே) 31ம் தேதி வெளியாகும் அறிவித்துள்ளது. மேலும் இந்த டைட்டில் டீசர் வீடியோவை மகேஷ் பாபுவின் சூப்பர் பேன்ஸ் வெளியிடவுள்ளதாகவும் சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களே வெளியிடவுள்ள இந்த டைட்டில் டீசரை டோலிவுட்டே எதிர்பார்த்துள்ளது.

மேலும், SSMB 28 டைட்டில் அப்டேட்டுடன் மகேஷ்பாபுவின் மாஸ்ஸான போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. அதேநேரம் SSMB 28, மகேஷ் பாபு போன்ற ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் படம் வெளியானதும் ராஜமெளலி இயக்கும் SSMB 29 படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ்பாபு. இதுவும் டோலிவுட் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X