SSMB 29: மகேஷ் பாபு, ராஜமெளலி கூட்டணியில் துல்கர் சல்மான்..? SSMB 29-ல் இணையும் பான் இந்தியா ஹீரோஸ்
சென்னை: ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியிருந்தார். இந்நிலையில் ராஜமெளலி அடுத்து இயக்கவுள்ள மகேஷ் பாபுவின் 29வது படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரம்மாண்ட கூட்டணியில் இணையும் துல்கர்
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர்கள் வரிசையில் ராஜமெளலியும் முன்னணியில் உள்ளார். நான் ஈ திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்த ராஜமெளலி, பாகுபலி வெளியான பின்னர் பான் இந்தியா லெவலில் மாஸ் காட்டினார். பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் பாக்ஸ் ஆபிஸில் 1200 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதோடு நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார் ராஜமெளலி. இந்நிலையில், தற்போது மகேஷ் பாபு நடிக்கும் அவரது 29வது படத்தில் பிஸியாகிவிட்டார் ராஜமெளலி. அதன்படி மகேஷ் பாபு - ராஜமெளலி இணையும் படத்துக்கு தற்காலிகமாக SSMB 29 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ராமாயணத்தை பின்னணியாக வைத்து உருவாகவுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ராஜமெளலி திட்டமிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அமேசான் காடுகளில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி SSMB 29 ஷூட்டிங் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகேஷ் பாபு, ராஜமெளலி கூட்டணியில் துல்கர் சல்மானும் இணைந்துள்ளாராம்.
மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் துல்கர் சல்மான், டோலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என வந்துவிட்டால் வெரைட்டியாக நடித்து கலக்கி வருகிறார். இந்த வரிசையில் தற்போது ராஜமெளலி இயக்கத்திலும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் கார்த்தியும் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
துல்கர் சல்மான் தவிர மேலும் சில பான் இந்தியா நடிகர்கள் நடிக்கவுள்ளார்களாம். இவையனைத்தும் விரைவில் கன்ஃபார்ம் ஆகிவிடும் என்றும், அதன் பின்னர் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் எனவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துல்கர் சல்மான் தற்போது தமிழில் தக் லைஃப், சூர்யா 43 படங்களில் லீடிங் கேரக்டரிலும், இன்னொரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











