SSMB 29: மகேஷ் பாபு பிறந்தநாளில் SSMB 29 அப்டேட்... ராஜமெளலியின் உச்சபட்ச பிரம்மாண்டம் லோடிங்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார்.

த்ரி விக்ரம் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து முதன்முறையாக ராஜமெளலி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ்பாபு.

தற்காலிகமாக SSMB 29 என்ற டைட்டீலில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட், சூட்டிங் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 SSMB 29: Rajamoulis SSMB29 update is To Be Officially Launched On Mahesh Babus Birthday

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் SSMB 29: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். ஸ்மார்ட் & ஸ்டைலிஷ் ஹீரோவான அவர், தற்போது குண்டூர் காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரி விக்ரம் இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை ராஜமெளலி இயக்குகிறார்.

இந்தியா சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற டைட்டிலில் மாஸ் காட்டி வரும் ராஜமெளலி, முதன்முறையாக மகேஷ் பாபுவுடன் இணைகிறார். ஹீரோ வெத்தலையில் சுண்ணாம்பு தடவும் காட்சிக்குக் கூட பல கோடி செலவு செய்து கிராபிக்ஸில் மிரட்டுவார் ராஜமெளலி. மஹதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என ஒவ்வொரு படத்திலும் தனது பிரம்மாண்டமான மேக்கிங்கால் பல கோடிகளை வசூலித்து காட்டினார்.

அதனால் மகேஷ் பாபுவின் படமும் பல கோடி பட்ஜெட்டில் எடுக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி SSMB 29 படத்திற்கு 800 கோடி ரூபாயை ஓக்கே செய்துள்ளாராம் ராஜமெளலி. தயாரிப்பாளர் கே.எல். நாராயணாவும் இன்னும் பல கோடிகளை கொட்டிக் கொடுக்க ரெடியாகவே இருக்கிறாராம். இந்தப் படத்தையும் வழக்கம் போல பான் இந்தியா ஜானரில் எடுக்கலாம் என ராஜமெளலி பிளான் செய்துவிட்டாராம்.

ஹை பட்ஜெட்டில் உருவாகும் SSMB 29 படத்தின் ஷூட்டிங் முழுவதும் காடுகளில் எடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஆப்பிரிக்கா காடுகள், அமேசான் மழைக் காடுகளில் லொக்கேஷன் பார்த்து முடிவு செய்துவிட்டாராம் ராஜமெளலி. குண்டூர் காரம் படப்பிடிப்பினை முடித்துவிட்டு மகேஷ் பாபு வந்ததும், SSMB 29 படத்தை தொடங்க ராஜமெளலி ரெடியாக காத்திருக்கிறார்.

அதன்படி 2024ம் ஆண்டு ஆரம்பத்தில் SSMB 29 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. முன்னதாக மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9ம் தேதி SSMB 29 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளதாம். இதற்காக மிகப் பெரியளவில் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிகிறது. இதில், மகேஷ் பாபு, ராஜமெளலி உள்ளிட்ட SSMB 29 படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X