SS Rajamouli: ஆஸ்காரையே கலக்கிய எஸ்.எஸ் ராஜமௌலிக்கு இவ்வளவு சொத்தா? ஒரு படத்தின் சம்பளம் தெரியுமா?
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குநர் என்றால் அது அனைவரும் சொல்வது எஸ்.எஸ். ராஜமௌலியைத்தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவின் முகமாக மாறினார், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் இந்திய சினிமாவின் முகமாக அங்கீகாரம் பெற்றார். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் சர்வதேச சினிமா கலைஞராக அங்கீகாரம் பெற்றார். இவர் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ராஜமௌலி இந்திய சினிமாவிலேயே தவிர்க்க முடியாத இயக்குநராக விளங்கி வருகின்றார். இந்தி சினிமாக்கள் வெளிநாடுகளில் கவனம் பெறும்போது அதனை வெளிநாட்டவர்கள் அதனை இந்திய சினிமா எனக் கூறினால், இந்தி திரையுலகினர் அதனை உடனே மறுத்து, வட இந்திய சினிமா எனக் கூறி வந்தனர். இப்படியான நிலையில்தான் ராஜமௌலியின் படங்கள் உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்தமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது வெளிநாட்டவர்கள் ராஜமௌலியின் படங்களை இந்திய சினிமா எனக் குறீப்பிடும்போது, அதனை தென்னிந்திய சினிமா என சொல்லி பெருமைப்படவைத்தவர் ராஜமௌலி.

பாகுபலி படத்தின் இராண்டாம் பாகம் இரண்டு ஆயிரம் கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது. ஆர்.ஆர். ஆர்., படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. ஆர்.ஆர்.ஆர்., படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டதால் இந்த படம் உலகம் முழுவதும் ரீச் ஆனது. இதனால் உலகத்தின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜேம்ஸ் கேமரூன் போன்றோர் இந்த படத்தினை பாராட்டியிருந்தனர்

அடுத்த படம்: இவரது அடுத்த படம் நடிகர் மகேஷ் பாபுவுடன் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இதனால், இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதேநேரத்தில் இந்தப் படத்தினை ஒரு பான் வோல்ட் படமாக எடுக்க ராஜமௌலி திட்டமிட்டு அதற்கேற்ற நடிகர்களைத் தேர்வு செய்து வருகின்றார். இதில் இந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவில் தனக்கென தனி மார்க்கெட் கொண்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிப்பதால் அவர்களின் கால் ஷீட்டிற்காக பல மாதங்கள் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் ஏற்கனவே சினிமா உலகில் பேசப்பட்டது.

குடும்பம்: ராஜமௌலி இன்றைக்கு தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். கடந்த 1973ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஆந்திராவின் சி.ஆர். ரெட்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். கடந்த 2001ஆம் ஆண்டு ரமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகேயா மற்றும் மயூகா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சொத்து மதிப்பு: இன்று தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடும் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு ஹைதராபாத்தில் பஞ்சாரா பகுதியில் சொகுசு பங்களா உள்ளது. அதேபோல் ரேஞ்ச் ரோவர் பி.எம். டபள்யூ உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களும் இவர் வைத்துள்ளார். ஒரு படத்திற்கு ரூபாய் 25 கோடிகள் வரை சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த ராஜமௌலி தற்போது ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடிகள் வரை சம்பளம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆர்.ஆர்.ஆர் படத்திற்கே இவரது சம்பளம் ரூபாய் 75 கோடிகள் என கூறப்படுகின்றது. இந்திய மதிப்பில் இவரின் மொத்த சொத்து கிட்டத்தட்ட 160 கோடிகளுக்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











