அதிரும் ஹைதராபாத்.. குருபூஜைக்கு செல்வது போல கார் பைக்கில் கொடி கட்டிப் பறக்கும் மகேஷ் பாபு ரசிகர்கள்!
ஹைதராபாத்: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாகவும் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் நடிக்கும் படம், Globe Trotter. இந்த படம் குறித்த அறிவுப்புகள் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் படத்தின் ப்ரீ புரெடக்ஷன் பணிகள் மட்டும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வந்தது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், படத்திற்காக அறிவிப்பு கொண்டாட்ட விழா இன்று அதாவது, நவம்பர் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் பல திரைப் பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்களும் கலந்து கொள்கிறார்கள்.
பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இதற்காக ரசிகர்கள் தொடங்கி அனைவருக்கும் சிறப்பு அனுமதிச் சீட்டு பாஸ்போர்ட் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மகேஷ் பாபு ரசிகர்கள் கார், பைக் என அனைத்திலும் கொடியைக் கட்டிக் கொண்டும், மகேஷ் பாபுவின் முகம் கொண்ட பேனர்களை கையில் பிடித்துக் கொண்டும், கொடிகளை பிடித்துக் கொண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராமோஜி பிலிம் சிட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து செல்கிறார்கள். அவர்கள் செல்வதைப் பார்த்தால் ஏதோ குரு பூஜைக்கு செல்வார்களே அது போல இருக்கிறது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ம்கேஷ் பாபு எச்சரிக்கை: மகேஷ் பாபுவின் வெறித்தனமான ரசிகர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். இதில் சிலர் கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து அனுமதிச் சீட்டுகளை வாங்கி உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நேற்று மகேஷ் பாபு வெளியிட்டிருந்த வீடியோவில் ரசிகர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இருந்தார். அனுமதிச் சீட்டு இல்லாமல் யாரையும் காவலர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். எனவே அனைவரும் அனுமதி சீட்டுடன் வரவும். பாதுகாவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாம் இன்னும் பல நிகழ்ச்சிகளில் சந்திக்க வேண்டி உள்ளது.
ஏமாற்றும் நபர்கள்: எனவே அனைவரது பாதுகாப்பும் முக்கியம் என்று தெரிவித்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிலர் ரசிகர்களை ஏமாற்றி பணம் பறிக்க, போலியான அனுமதிச் சீட்டுகளை விற்பனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால், கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயமும் உள்ளது என்பதால், ரசிகர்களுக்கு முன் கூட்டியே அறிவுரைகளை வழங்கி உள்ளார் மகேஷ் பாபு.


Click it and Unblock the Notifications











