படம் நடிச்சுட்டு இருக்கும்போதே புரொபோஸ் பண்ண பிரபலங்கள்.. தமிழ் சினிமாவும்.. காதலும்!
சென்னை: பிப்ரவரி மாதமே காதலர் தினம் கொண்டாடும் மாதம் தான். தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் பற்றி ஒரு சின்ன அலசல்.
தமிழ் சினிமா பல காதல் ஜோடிகளை வழங்கியுள்ளது. திரையில் தோன்றியவர்களுடன் நிஜத்திலும் பலர் திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக இல்லற வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

சாந்தனு - கீர்த்தி
சாந்தனு மற்றும் கீர்த்தி சிறு வயது நண்பர்கள். இதன் பின் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி இருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

அட்லி - பிரியா
அட்லி தமிழ் சினிமாவில் பல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர். இவரும் பிரியாவும் பல வருடங்கள் நண்பர்களாக பழகி வந்தனர். ஒரு நாள் பிரியா அட்லியிடம் வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறியுள்ளார். அட்லி அதற்கு காமெடியாக ஏன் என் ஜாதகத்தை அவர்களிடம் காட்டவில்லை என்று கேட்டுள்ளார். அதன் பின் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆர்யா - சாய்ஷா
நீண்ட நாட்களாகவே பெண் தேடி அலைந்து வந்த நடிகர் ஆர்யா, அது தொடர்பாக ஒரு ரியாலிட்டி ஷோவையும் நடத்தி இருந்தார். வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சாயிஷாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த ஆர்யா, அவரை புரொபோஸ் பண்ண இருவரது வீட்டார் சம்மதத்துடன் மீண்டும் ஒரு நட்சத்திர ஜோடி திருமணம் தமிழ் சினிமாவில் அரங்கேறியது.

சூர்யா - ஜோதிகா
பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த நட்சத்திர ஜோடியான சூர்யா - ஜோதிகா, காக்க காக்க பட ஷூட்டிங்கின் போது காதலித்து வந்தனர். பின்னர் 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

சினேகா - பிரசன்னா
அச்சமுண்டு அச்சமுண்டு பட ஷூட்டிங்கின் தொடக்கத்தில் இருவரும் பேசி பழகினார்கள். பட ஷூட்டிங் முடியும் பொழுது அது காதலாக மாறியது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் - ஷாலினி
தமிழ் சினிமா வரலாற்றில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடி வரிசையில் நிச்சயம் இவர்களது பெயர் இடம்பெற்றிருக்கும். குழந்தை பருவம் முதலே பல படங்களில் நடித்து அசத்திய ஷாலினி, ஹீரோயினாக குறைவான படங்களிலேயே நடித்தார். ஆனால், அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட். அஜித்துடன், அமர்களம் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் ஏற்பட்ட காதல் வெற்றிகரமான திருமணத்தில் நிறைவுபெற்றது.


Click it and Unblock the Notifications











