Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முன்னாள் முதல்வர் மகன்...இளம் ஹீரோ திருமண ஏற்பாடுகள் திடீர் நிறுத்தம்...இதுதான் காரணம்!
பெங்களூரு: நடிகரும் முன்னாள் முதல்வரின் மகனுமான இளம் ஹீரோவின் திருமண ஏற்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, அனிதா தம்பதியின் மகன் நிகில் குமாரசாமி.
முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவின் பேரனான இவர், ஜாக்குவார் என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அபிமன்யூ
இதையடுத்து ஹர்ஷா இயக்கிய சீதாராமா கல்யாணா என்ற படத்தில் நடித்தார். இதில் சரத்குமார், ரச்சிதா ராம் உட்பட பலர் நடித்திருந்தனர். அடுத்து மகாபாரத கதையை கொண்ட குருஷேத்ரா படத்தில் அபிமன்யூ கேரக்டரில் நடித்திருந்தார். அடுத்து எஸ்.கிருஷ்ணா இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

மாண்டியா தொகுதி
இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதா, பாஜக ஆதரவில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பலத்த போட்டிக்கு இடையே நடந்த தேர்தலில் சும லாதா அபார வெற்றி பெற்றார். நிகில் தோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் தலைவர்
இந்நிலையில் நிகிலுக்கு பெண் பார்த்து வந்தனர். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதியை பேசி முடித்திருந்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மேடை பணிகள்
திருமணம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இதை பிரமாண்டமாக நடத்த தேவகவுடா குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக ராமநகர் பகுதியில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இந்நிலையில் இந்தப் பணிகளை குமாரசாமி, நிறுத்தச் சொல்லிவிட்டதாக அந்தப் பகுதி ஜனதா தள (எஸ்) கட்சியின் தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்
'திருமணம் ஏப்ரல் 17 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டில் இருந்தும் பிரமுகர்கள் வர உள்ளனர். இன்னும் திருமண பத்திரிகை கொடுக்க ஆரம்பிக்கவில்லை. கொரோனா வைரஸ் பரவி வருவதால் தேவகவுடா குடும்பத்தினர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் திருமணத்தை அரண்மனை மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்' என்று கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளிவரவில்லை.