Leo Audio Launch - லியோ இசை வெளியீட்டு விழா.. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பணிகள் தொடக்கம்?

சென்னை: Leo Audio Launch (லியோ இசை வெளியீட்டு விழா) லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான மேடை தயாரிக்கும் பணிகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியிருக்கின்றன.

தமிழின் டாப் ஹீரோவான விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் ரேஸில் இருக்கிறார்.அதற்கு காரணம் அவரது படங்கள் பெரும்பாலும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடுகின்றன. இருந்தாலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகியவை விமர்சன ரீதியாக கடும் விமர்சனத்தையும், ட்ரோலையும் சந்தித்தன. எனவே விமர்சனம்,வணிகம் ஆகிய இரண்டு ரீதியிலும் ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார் விஜய்.

stage preparation for the Leo Audio Launch has begun at the Nehru Indoor Stadium

லியோ: அதனை பூர்த்தி செய்ய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. அதைவிட அதிக ரெஸ்பான்ஸை இந்தப் படம் பெறும் என்ற நம்பிக்கை தளபதி ரசிகர்களிடம் இருக்கிறது.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. விஜய்யும் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடித்துவிட்டார் என்று தெரிகிறது. எனவே படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் லியோ படத்தின் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

இசை வெளியீட்டு விழா: நிலைமை இப்படி இருக்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. முதலில் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் நடக்கலாம் என்றும்; பிறகு மலேசியாவில் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்படவிருக்கிறது.

stage preparation for the Leo Audio Launch has begun at the Nehru Indoor Stadium

ஸ்டேஜ் ரெடி: செப்டம்பர் 30ஆம் தேதி லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன. இந்த மேடை அமைக்கும் பணி லியோ ஆடியோ வெளியீட்டு விழாவுக்குத்தான் என்று ஆணித்தரமாக கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள்.

குட்டி கதை?: முன்னதாக ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் குட்டி கதை ஒன்றை கூறினார். அது சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்காக விஜய்யை மனதில் வைத்து சொன்ன கதை என கூறப்பட்டது. எனவே லியோ ஆடியோ லான்ச்சில் விஜய்யும் ரஜினிக்கு எதிராக குட்டி கதை சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு தளபதி ரசிகர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X