சமூக நீதி.. வரலாறு காணாத வளர்ச்சியடைய.. வாழ்த்து சொன்ன ஏஆர் ரஹ்மான்.. அப்படியே ஏற்ற ஸ்டாலின்!
சென்னை: தமிழக முதல்வராக முதல் முறையாக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளார்.

நினைவிடத்தில் ஆசி
வெற்றி சான்றிதழை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் நள்ளிரவிலே கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் திமுக அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

எளிமையாக பதவியேற்பு
வரும் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக எளிமையாக பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

வரலாறு காணாத வளர்ச்சியடைய
ஸ்டாலினுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ள டிவிட்டில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! என குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையை நிறைவேற்றிடும்
ஏஆர் ரஹ்மானின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவோம் என பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











