»   »  ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்... - பவர்ஸ்டார் அதிரடி!

ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்... - பவர்ஸ்டார் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'அ.தி.மு.க, தி.மு.க மாதிரி பெரிய கட்சிகளில்தான் சேருவேன்' என நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

'நான் தெரிஞ்சு எந்தத் தப்பும் செய்யல. தெரியாம, அறியாம செஞ்ச தப்புக்காக கூட இருந்தவங்களே என்னைப் பழிவாங்கிட்டாங்க. என்னோட வளர்ச்சியையும், புகழையும் எதிரிகள் தடுக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா, பாவம் என் வளர்ச்சியும் வீழ்ச்சியும் கடவுள் ஒருத்தன் கையில மட்டும்தான் இருக்குனு அவங்களுக்குத் தெரியலை. அவங்களால நான் போனது ஜெயிலுக்கு இல்ல... ஆசிரமத்துக்கு.' என ஒரு பேட்டியில் பவர்ஸ்டார் தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் புதுசு இல்ல :

இதெல்லாம் புதுசு இல்ல :

'அரசியல் எனக்குப் புதுசு இல்லை. அ.தி.மு.க-வில் மருத்துவ அணியின் மாநிலப் பொருளாளராக இருந்தேன். அந்தச் சமயத்தில் மைத்ரேயன் எம்.பி, டாக்டர் வேணுகோபால் தலைமையில் செயல்பட்டுக்கிட்டிருந்தேன். அங்கேயும் என்னோட வளர்ச்சி பிடிக்காத சிலர், அம்மாகிட்ட என்னைப் பற்றி தப்புத் தப்பா போட்டுக்கொடுத்துட்டாங்க. அதுலயும் பலிகடா ஆகிட்டேன்.

தி.மு.க தான் ஜெயிக்கும் :

தி.மு.க தான் ஜெயிக்கும் :

அ.தி.மு.க-வில் இப்ப நடக்குறது எல்லாம் குடும்பத்துக்குள்ள வர்ற அண்ணன்-தம்பி சண்டைதான். பிரிஞ்சு இருக்கிறவங்க எல்லாரும் இணைஞ்சுட்டா எல்லாம் சரியாகிடும். ஆனா, இப்போ சொல்றேன் எழுதிவெச்சுக்கோங்க. அடுத்த முறை தி.மு.க-தான் ஜெயிக்குது. ஸ்டாலின் தான் முதல்வர்.

'பிக் பாஸ்' பவரு :

'பிக் பாஸ்' பவரு :

பிக் பாஸ் வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டாங்க. சில பிரச்னைகளால என்னால அங்க போகமுடியல. இந்த சீசன் இல்லைன்னா என்ன அடுத்த சீசன்ல கண்டிப்பா போயிருவேன். போனா நான்தான் வின்னர். ஜெயில்லயே பல மாசம் இருந்த எனக்கு 100 நாள்லாம் ஜுஜுபி.

ஊழல் பண்ணுனா மாட்டிக்குவாங்க :

ஊழல் பண்ணுனா மாட்டிக்குவாங்க :

கமல் சாரோட அரசியல் ஆர்வம் கரெக்ட்தான். இருந்தாலும் திடீர் திடீர்னு அறிக்கைவிடுறதெல்லாம் மக்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்ல. அவங்க ஊழல் செஞ்சாங்களா இல்லையாங்கிறது நமக்குத் தெரியாம பதவியில இருந்து விலகச் சொன்னா எப்படி? எல்லாரும்தான் ஊழல் பண்றாங்க. அப்படிச் செய்றவங்க மக்கள்கிட்ட நிச்சயமா மாட்டிக்குவாங்க.

ரஜினி, கமல் கட்சியில் சேரமாட்டேன் :

ரஜினி, கமல் கட்சியில் சேரமாட்டேன் :

ரஜினி, கமல் ரெண்டுபேரும் புதுக் கட்சி ஆரம்பிச்சா அவங்க கட்சியில் எல்லாம் சேரமாட்டேன். எனக்கு மாபெரும் கட்சியில் சேரணும்னுதான் ஆசை. அதனால அ.தி.மு.க., தி.மு.க-தான் இப்போதைக்கு என்னோட சாய்ஸ்.' எனக் கூறினார் பவர்ஸ்டார்.

English summary
Powerstar is back from Tihar jail. He said that if election comes, DMK will emerge winner and MK Stalin will be the next CM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil