'இப்படை நிச்சயம் வெல்லும்' - மகன் படத்தைப் பார்த்துரசித்துப் பாராட்டிய ஸ்டாலின்!

By Vignesh Selvaraj

சென்னை : மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படத்தை பார்த்து ரசித்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கௌரவ் நாராயணன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இப்படை வெல்லும்'.

இப்படம் நாளை மறுநாள் நவம்பர் 9-ம் தேதி வெளியாக உள்ளது. உதயநிதி நடிக்கும் படம் ஒவ்வொன்றையும் வெளியீட்டிற்கு முன்பாகவே தவறாமல் பார்த்துவிடுவார் மு.க.ஸ்டாலின்.

பாராட்டிய மு.க.ஸ்டாலின்

உதயநிதியின் அப்பா ஸ்டாலின், 'இப்படை வெல்லும்' படத்தையும் தன் குடும்பத்தாருடன் பார்த்து ரசித்துள்ளார். படம் பார்க்க வந்த அவரை தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், இயக்குனர் கௌரவ் நாராயணன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், 'இப்படை நிச்சயம் வெல்லும்' எனப் பாராட்டினாராம்.

இப்படை நிச்சயம் வெல்லும்

படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு, ராஜு மகாலிங்கம் நன்றி தெரிவித்துள்ளளார். படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன், படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், 'இப்படை நிச்சயம் வெல்லும்' எனப் பாராட்டியதாக ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

பெரிய வெற்றி பெறுமா

பெரிய வெற்றி பெறுமா

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு அப்படியொரு வெற்றியை இதுவரை உதயநிதி ஸ்டாலின் கொடுக்கவில்லை. அவர் முதல் முறையாக வேறு நிறுவன பேனரில் நடித்துள்ள இந்தப் படத்தையும் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை.

எச்.ராஜா

எச்.ராஜா

இந்தப் படத்தின் ப்ரஸ்மீட்டில் உதயநிதி, எச்.ராஜா மனது வைத்தால் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கூறியிருந்தார். அதற்கு எச்.ராஜா 'நாங்க உதவினாலும் பிரயோஜனம் இல்லை' எனக் கலாய்த்தார். 'இந்த ப்ரொமோஷனை விட்டுடாதீங்க' என இயக்குநர் கௌரவ் ராஜாவை திரும்ப சீண்டினார். ஸ்டாலின் சொன்னபடி படம் வெல்லுமா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X