சரியான நேரத்தில் சரியான படம்.. ஸ்டாலின் பாராட்டை பெற்ற ஜிப்ஸி!
சென்னை: ஜீவா நடித்து இருக்கும் ஜிப்ஸி படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துவிட்டு இயக்குனரை பாராட்டியுள்ளார்.
Recommended Video
ஜீவா நடித்து கடந்த வருடம் வெளியாக வேண்டிய திரைப்படம் ஜிப்ஸி, சில பல காரணங்களால் அப்படம் வெளியாகாமல் தள்ளி போனது, தற்போது இந்த படம் வரும் ஆறாம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ராஜூ முருகன் எப்போதும் தனது வித்தியாசமான கதை களம் மற்றும் திரைக்கதையுடன் படத்தின் இறுதியில் கண்டிப்பாக ஒரு ஆழமான கருத்தை வைத்து இருப்பார். இதற்கு முன்பு இயக்கிய குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த படத்திற்கான தேசிய விருது இவருக்கு கிடைத்தது.
இந்த ஜிப்ஸி படத்திற்காக ரசிகர்கள் பலரும் பல நாட்கள் காத்து இருந்தனர், படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகின. சந்தோஷ் நாராயணன் இசை மிகவும் அற்புதம் என்று பலரும் பாராட்டியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிட்டார்.

ராஜு முருகன் எப்போதும் சமூகத்தின் மேல் அரசாங்கம் நடத்தும் செயலை தோல் உறிக்கும் காட்சிகளை அதிகம் வைப்பார், அந்த வகையில் இந்த படத்தில் அது அதிகமாகவே இருக்கும் என்று ரசிகர்களுக்கு தெரிய வருகிறது. கண்டிப்பாக ஜீவாவிற்கு இந்த வருடம் சீறு படம் வெற்றியை தேடி தந்தது அதே போல ஜிப்ஸி திரைப்படமும் ஜீவாவிற்கு இரண்டாவது வெற்றியை தேடி தரும் என்று ரசிகர்கள் மற்றும் திரைதுறை சார்ந்தவர்களின் கருத்து.
இப்படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் பார்த்தார், இயக்குனர் ராஜு முருகனிடம் கை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார், மேலும் "சரியான படம் சரியான நேரத்தில் வந்துள்ளது என்றும் கூறினார் ஸ்டாலின். இது போன்ற பாராட்டுக்களை ராஜு முருகன் பெற்றுள்ளார் மேலும் கண்டிப்பாக படம் நிச்சயம் ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











