ஆஹா.. தேன்போல இனித்திடும் வாக்குறுதி.. ஸ்டாலின் சொன்ன பதிலால் செம ஹேப்பி மோடில் ஏஆர் ரஹ்மான்!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் பதிலால் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் செம ஹேப்பியாகியுள்ளார்
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் தனித்து 130க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ளது.

உடனடியாக பதில்
முதல் முறையாக முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு திரைத்துறை பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்களுக்கெல்லாம் உடனடியாக ஸ்டாலின் தரப்பில் இருந்து நன்றி கூறப்பட்டு வருகிறது.

வரலாறு காணாத வளர்ச்சியடைய
அந்த வகையில் ஸ்டாலின் வெற்றியை தொடர்ந்து சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழிலேயே பதிவிட்டு டிவிட்டியிருந்தார் ஏஆர் ரஹ்மான்.

நம்பிக்கையை நிறைவேற்றிடும்
ஏஆர் ரஹ்மானின் இந்த வாழ்த்துக்கு உடனடியாக ஸ்டாலினிடம் இருந்து பதில் வந்தது. அதாவது, இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.

தேன் போல இனிக்குது
இதனை பார்த்து செம ஹேப்பியாகியுள்ளார் ஏஆர் ரஹ்மான். ஸ்டாலினின் இந்த டிவிட்டுக்கு ஏஆர் ரஹ்மான் பதிலளித்துள்ளார். அதாவது, கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு இது, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என மீண்டும் தமிழிலேயே பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











