தனியா நின்னாலும் உயர்ந்து நில்லுங்க... நடிகை சனம் ஷெட்டியோட அட்வைஸ்!
சென்னை : தமிழில் அம்புலி படத்தின்மூலம் அறிமுகமான சனம் ஷெட்டி தற்போது தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்று புகழ்பெற்ற இவர் தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி வருகிறார்.
தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் பரபரப்புடன் செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது பல்வேறு ட்வீட்களையும் பதிவிட்டு வருகிறார்.

பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி
தமிழில் அம்புலி படம் மூலம் அறிமுகமாகிய நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்று ரசிகர்களின் அன்பிற்கு உரியவரானார். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் நடித்துவரும் இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

பல்வேறு உதவிகள்
தற்போது கொரோனா பாதிப்பு சூழலில் பல்வேறு விதமான உதவிகளை சமூக வலைதளங்கள் மூலம் செய்து வருகிறார். மேலும் பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். ட்விட்டர் பக்கத்தில் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார்.

உயர்ந்து இருங்கள்
இந்நிலையில் சனம் ஷெட்டி தன்னுடைய தற்போதைய பதிவில் அழகான தன்னுடைய புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீலநிற உடையில் அந்த புகைப்படத்தில் அழகாக காட்சியளிக்கிறார் சனம் ஷெட்டி அதில் அவர் வெளியிட்டுள்ள கேப்ஷனில் தனித்து நின்றாலும் உயர்ந்து இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு
இந்த பதிவு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் பிக்பாஸ் 4வது சீசனின் பாலாஜி முருகதாஸ் அந்த சீசனில் தன்னுடைய மனம் கவர்ந்த பெண் போட்டியாளர்கள் என்று 8 பெண்கள் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதில் சனம் ஷெட்டியின் பெயர் இல்லாததால் ரசிகர்கள் அவரிடம் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











