ஸ்டாண்ட் டப் காமெடியன் அலெஸ் கூட டீல் வைத்துள்ளாரா மாதவன்?
ஸ்டாண்ட் டப் காமெடி இப்போதய ட்ரெண்ட். அதனை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படி ஸ்டாண்ட் டப் காமெடி செய்து பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவர் தான் அலக்ஸான்டர் பாபு. சமூக வலைத்தளங்களில் இவரை தெரியாதவர்கள் என யாரும் இருக்க முடியாது. இதற்கு காரணம் அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு மிக்ஸ் பாடல். ஏசுதாஸ் அவர்கள் பாடின 'மாசி மாசம்' பாடலையும் ஜயப்பா வரிகளையும் கோர்த்து செய்த காமெடி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல்.

இவர் அமேசானில் 'அலெக்ஸ் இன் ஒன்டர்லேன்ட்' எனும் நிகழ்ச்சியில் ஸ்டேன்டப் காமெடி செய்து வருகிறார். அது சீரிஸாக வெளியிடப்பட்டு வருகிறது. இவர் இதற்கு முன்பே யூடியூப் மற்றும் பல தனியார் மேடைகளில் ஸ்டாண்ட் டப் காமெடி செய்துள்ளார். இவர் ஸ்டாண்ட் டப் காமெடி செய்வதை தவிர்த்து யோகா பயிர்ச்சியாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஸ்டாண்டடப் காமெடியன் எஸ்.ஏ.அரவிந்தை பார்த்து தான் இந்த துறைக்கு வந்ததாக கூறுகிறார்.
தற்போது ஸ்டாண்டடப் காமெடியன் அலக்ஸான்டர் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மாதவன் மற்றும் இயக்குனர் திலிப்புடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பரவி வைரலாகி வருகிறது.
இவர்களுடன் ஒரு புராஜக்ட்டுக்காக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார் அலெக்சாண்டர். அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படும் என கூறியிருக்கிறார். இவர் அந்த புராஜக்டில் நடிக்க போகிறாரா அல்லது கதையில் பணியாற்றி இருக்கிறாரா என்று எந்த ஒரு தகவலையும் அவர் குறிபிட்டு சொல்லவில்லை. அது என்னவென்று பொருத்திருந்து பாப்போம்.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகரான மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' மற்றும் 'விக்ரம் வேதா' படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 'நிசப்தம்' எனும் படத்தில் நடித்து வருகிறார். மாதவன் அனுஷ்கா ஷெட்டி இணையும் இந்த படத்தை இயக்க உள்ளார் ஹிந்தி பட இயக்குனர் ஹேமந்த் மாதுகர் .
ஹிந்தியில் 'ஏ பளாட்', 'மும்பை125கிமு' ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய இவர் மாதவன் அனுஷ்காவை வைத்து ஒரு த்ரில்லர் படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'நிசப்தம்' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியாக போவதாக தகவல் வெளியாகியது.
தமிழில் சுந்தர. சி இயக்கத்தில் 'இரண்டு' படத்திற்கு பின் மாதவனும் அனுஷ்காவும் இணையுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
'ராக்கட்டரி :தி நம்பி எபக்ட்' என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
மாதவன் மறுபடியும் தமிழ் சினிமாவை தன் வசம் இழுக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதி. அவருக்காக ஏங்குகிறார்கள் அவரின் ரசிகைகள்.


Click it and Unblock the Notifications











