லவ் யூ ஸோ மச் ... மாலத்தீவில் ஆர்யா - சாயிஷா ரொமான்ஸ்!

By

சென்னை: நடிகர் ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மனைவியும் நடிகையுமான சாயிஷா பதிவிட்டுள்ள வாழ்த்தும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர். பின்னர் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

star couple Arya and Sayyesha romances in Maldives

இவர்கள் இணைந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இருந்தாலும் இதில் ஜோடியாக நடிக்கவில்லை. இதையடுத்து டெடி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆர்யாவின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஆர்யாவும் சாயிஷாவும் பிறந்தநாளைக் கொண்டாட மாலத்தீவுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

காதல் கணவரான ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை வாழ்த்தி நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். அதில், எனக்குத் தெரிந்து அதிகமாக வியக்கத்தக்க மனிதர் நீங்கள்தான். உங்களுக்கு சிறப்பான அனைத்தும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன். ஐ லவ் யூ ஸோ மச்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கூடவே மாலத் தீவில் அவர் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் சைக்கிளை பிடித்தபடி இருக்கின்றனர். அந்த சைக்கிள்களில் ஆர்யாவின் ஒரிஜினல் பெயரான ஷம்ஜத், சாயிஷா பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X