காத்துவாக்குல ரெண்டாவது ஹனிமூன்.. பார்சிலோனாவில் ரொமான்டிக் மூடில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

சென்னை: திருமணத்துக்கு பிறகும் தீவிரமாக பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா.

மும்பையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானின் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி உடன் இறைவன் உள்ளிட்ட படங்களில் நடித்த வந்த நிலையில், திடீரென இரண்டாவது ஹனிமூனுக்கு கணவருடன் கிளம்பி சென்றிருக்கிறார் நயன்தாரா.

விமானத்தில் ஏறியதில் இருந்து பார்சிலோனாவில் இருவரும் படு ரொமான்டிக் மூடில் இருக்கும் போட்டோக்கள் வரை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

பிரம்மாண்ட திருமணம்

பிரம்மாண்ட திருமணம்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் திருமணம் செய்துக் கொண்டார் நடிகை நயன்தாரா ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி என நட்சத்திர பட்டாளமே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் அந்த அழகான தருணங்கள் நெட்பிளிக்ஸில் டாக்குமென்ட்ரியாக ரிலீஸாக காத்திருக்கிறது.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

திருமணம் முடித்த கையோடு நடிகை நயன்தாரா ஹனிமூனுக்கெல்லாம் போக மாட்டார், படத்தில் தான் நடிக்கப் போகிறார் என பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், கணவன் மனைவி இருவரும் தாய்லாந்துக்கு சென்று தங்களின் ஹனிமூனை சீரும் சிறப்புமாக படு மஜாவாக கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது.

மும்பையில் இரண்டு படம்

மும்பையில் இரண்டு படம்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் ஜவான் மற்றும் இயக்குநர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் இறைவன் என இரு படங்களின் படப்பிடிப்புகளும் மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், கிடைத்த சின்ன கேப்பில் தற்போது ஸ்பெயின், பார்சிலோனியாவிற்கு இரண்டாவது ஹனிமூனுக்கு நட்சத்திர ஜோடி பறந்துள்ளனர்.

இரண்டாவது ஹனிமூன்

இரண்டாவது ஹனிமூன்

பார்சிலோனாவில் கருப்பு நிற டாப்ஸ் உடையுடன் நடிகை நயன்தாரா கழுத்தில் மஞ்சத் தாலி மின்ன கொடுத்துள்ள டாப் ஆங்கிள் போஸ் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவியுடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள நிலையில், அங்கே இருவரும் படு ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

ஹீரோ போலவே

ஹீரோ போலவே

இயக்குநர் விக்னேஷ் சிவனும் செம ஸ்மார்ட்டாக ஹீரோ போலவே இருந்து வருவதால், விக்னேஷ் சிவன் இயக்கி நடிக்க நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண டாக்குமென்ட்ரி விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகி ரசிகர்களின் அந்த ஆசையையும் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெஷல் காரணம்

ஸ்பெஷல் காரணம்

ஏற்கனவே தாய்லாந்துக்கு இருவரும் ஹனிமூன் சென்று வந்த நிலையில், இருவரும் தற்போது பார்சிலோனாவிற்கு பறந்திருப்பதற்கு பின்னணியில் ஏதாவது ஸ்பெஷல் காரணங்கள் இருக்குதா என்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சுற்றுலா செய்யவே இருவரும் சென்றிருப்பதாக போட்டோக்களை வெளியிட்டே அதற்கு பதில் சொல்லி உள்ளார் விக்னேஷ் சிவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X