இப்பவே கண்ணகெட்டுதே: இதில் விளம்பர பட சம்பளத்தை மேலும் உயர்த்தும் பாலிவுட் நட்சத்திரங்கள்
மும்பை: விளம்பரங்களை ஒளிபரப்புச் செய்வதற்கான கட்டணத்தை தொலைக்காட்சி சேனல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் பிரபலங்களும் விளம்பரத்தில் நடிக்க வாங்கும் சம்பளத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைக்காட்சியில் ஒரு மணிநேரத்திற்கு 12 நிமிடங்கள் தான் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும் என்றும், செய்தி சேனல்களில் ஒரு மணிநேரத்திற்கு 20 நிமிடங்கள் தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) தெரிவித்துள்ளது. டிவி சேனல்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதலும், செய்தி சேனல்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதலும் இந்த புதிய விதிமுறையை அமல்படுத்துகின்றன.
இதையடுத்து விளம்பரங்களை ஒளிபரப்புச் செய்வதற்கான கட்டணத்தை தொலைக்காட்சி சேனல்கள் அதிகரித்துள்ளது. இதனால் விளம்பரங்களில் கோடி கோடியாய் பணம் பார்க்கும் பாலிவுட் பிரபலங்களும் தங்கள் சம்பளத்தை உயர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் நட்சத்திரங்கள் விளம்பரங்களில் நடிக்க தற்போது வாங்கும் சம்பளத்தைப் பார்ப்போம்.

ஆமீர் கான்
பர்பக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அக்ஷய் குமார்
சிறுத்தை இந்தி ரீமேக் மூலம் வசூலில் புதிய சாதனை படைத்த அக்ஷய் குமார் விளம்பரங்களில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ.3.5 கோடி வாங்குகிறார்.

சல்மான் கான்
40 வயதைத் தாண்டியும் பிரம்மச்சாரியாகவே இருக்கும் சல்மான் கான் விளம்பரப் படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.3 கோடி பெறுகிறார்.

ரன்பீர் கபூர்
இளம் நடிகர் ரன்பீர் கபூர் விளம்பரங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வாங்குகிறார்.

கரீனா கபூர்
பெபோ என்று அழைக்கப்படும் கரீனா கபூர், கத்ரீனா கைப் ஆகியோரின் ஒரு நாள் சம்பளம் ரூ. 1.5 கோடி.

பிரியங்கா, தீபிகா
பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் விளம்பரப் படங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வாங்குகிறார்கள்.


Click it and Unblock the Notifications











