போட்டி கன்னாபின்னான்னு இருக்கும் போலயே...இப்போதைய மோஸ்ட் வான்ட்டட் ஹீரோயின்கள் இந்த 2 பேருதான்!
சென்னை: தமிழ், தெலுங்கு சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வான்டட் ஹீரோயின்களாக அந்த இரண்டு பேரையும்தான் சொல்கிறார்கள்.
Recommended Video
சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புது புது ஹீரோயின்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள்.
இதற்கு அவர்களுக்கு கிடைக்கும் படங்கள்தான் காரணம். பெரிய ஹீரோ, நல்ல கதை, சிறந்த இயக்குனர் அமைந்தால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும். இல்லை என்றால் கஷ்டம்தான்.

சென்டிமென்ட்
இப்படி ஒரு சில படங்களோடு, சினிமா கண்டுகொள்ளாமல் விட்ட நடிகைகள் ஏராளம். அதனால்தான் நடிகைகளுக்கான லைஃப், சினிமாவில் குறைவு என்கிறார்கள். சில ஹீரோயின்களுக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதற்கு அதிர்ஷ்டத்தை காரணம் சொல்கிறார்கள். சென்டிமென்ட்களால் நிறைந்த சினிமாவில், இந்த அதிர்ஷ்ட சென்டிமென்ட் அதிகமாகவே ஆட்டம் போடுவது வழக்கம்தான்.

பெய்யும் மழை
ஒரு படம் ஹிட்டானால் அந்தப் படத்தின் ஹீரோ, இயக்குனர் மட்டுமல்லாமல், ஹீரோயின் காட்டிலும் பெய்யத் தொடங்கும் மழை! அப்படி, இப்போது அதிர்ஷ்ட மழை பெய்யும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. நடித்த படங்கள் அனைத்தும் தொடர் ஹிட்டாக, ராஷ்மிகாவுக்கு குவிகிறது வாய்ப்புகள். கன்னடத்தில் நடிக்கத் தொடங்கிய ராஷ்மிகா, தெலுங்குக்கு வந்தார்.

ராஷ்மிகா மந்தனா
அங்கு டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட, அடுத்து தமிழுக்கும் வந்திருக்கிறார். கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா, அருவா படத்தில் சூர்யா ஜோடியாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் தமிழிலும் ஒரு ரவுண்ட் வருவார் என்கிறார்கள். இவரது இடத்தில், இதற்கு முன் இருந்த கீர்த்தி சுரேஷ், தனது டாப் சீட்டில் இருந்து கொஞ்சம் இறங்கிவிட்டார் என்கிறது கோலிவுட்.

பூஜா ஹெக்டே
ராஷ்மிகாவை விட்டால், அடுத்த ஹீரோயினாக, பூஜா ஹெக்டேவுக்கு டிமான்ட் அதிகமாகி இருக்கிறது என்கிறார்கள். இவர் வேறு யாருமல்ல, தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர். பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்த இவர், இந்தியிலும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த சில படங்கள் ஹிட்டாக, அடுத்து டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

முன்னணி ஹீரோ படங்கள்
தமிழில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தில், இவர்தான் ஹீரோயின் என்கிறார்கள். மேலும் சில தயாரிப்பு நிறுவனங்களும் இவரிடம் பேசி வருகிறதாம். தமிழ், தெலுங்கு சினிமாவில் இந்த இரண்டு ஹீரோயின்களுக்கும் அதிக டிமான்ட் இருக்கிறது. முன்னணி ஹீரோ படங்களுக்கு இவர்கள் இரண்டு பேரை மட்டுமே பேசிவருவதாக சொல்கிறார்கள், சினிமாவில்!


Click it and Unblock the Notifications











