»   »  ஒரே படத்தில் இரண்டு பிரபலங்களின் பிள்ளைகள்: யார் என்று கண்டுபிடிங்க?

ஒரே படத்தில் இரண்டு பிரபலங்களின் பிள்ளைகள்: யார் என்று கண்டுபிடிங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அம்பிகாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கிறார்.

வாரிசு நடிகர்கள், நடிகைகள் கோலிவுட்டுக்கு ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில் தான் பிரபல நடிகர் லிவிஸ்டன், நடிகை அம்பிகாவின் வாரிசுகள் நடிக்க வந்துள்ளனர்.

அவர்கள் அறிமுகமாகும் படத்தின் பெயர் கலசல்.

 மகன்

மகன்

அம்பிகாவின் மகன் ராம் கேசவ் கோலிவுட்டில் ஹீரோவாகியுள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் கலசல் படத்தை சுந்தர் சி.யிடம் உதவியாளராக இருந்த அஷ்வின் மாதவன் இயக்குகிறார்.

 மகள்

மகள்

லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா ராம் கேசவ் ஜோடியாக நடிக்கிறார். ஜோவிதா, ராம் கேசவ், இயக்குனர் அஷ்வின் மாதவன் ஆகியோருக்கு இது தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 கலசல்

கலசல்

கலசல் படப்பிடிப்பு நாளை பழனியில் துவங்குகிறது. அதன் பிறகு கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்தை கலைத்தாய் பிலிம்ஸின் பாலு தயாரிக்கிறார்.

 ராதாரவி

ராதாரவி

கலசல் படத்தில் அம்பிகாவும் நடிக்கிறார். மேலும் ராதாரவி, மதன்பாப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். நடிகைகள் லிசி, ஜீவிதாவின் வாரிசுகள் நடிக்க வந்துள்ள நிலையில் அம்பிகா, லிவிங்ஸ்டன் வாரிசுகளும் வந்துள்ளனர்.

Read more about: kollywood tamil cinema
English summary
Actress Ambika's on Ram Keshav is making his debut as hero in a tamil movie titled Kalasal to be directed by debutant Ashwin Madhavan. Actor Livingston's daughter Jovitha is the heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil