கடைசி நேரத்தில் கவின் பட இயக்குநர் வைத்த திடீர் கோரிக்கை.. ஸ்டார் படத்தில் ட்ரிபிள் சர்ப்ரைஸ்!

சென்னை: கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஸ்டார் படத்தின் இயக்குநர் இளன் திடீரென ஒரு கோரிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் ரொம்பவே உருக்கமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு காரணம் இந்த படம் அவரது தந்தை ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

Star Movie Director Elan requests fans don t reveal the 3 surprises which present in this movie

ராஜா ராணி படத்தில் நடிகர் ஜெய்யின் தந்தையாக நடித்த ஸ்டில்ஸ் பாண்டியன் தான் இயக்குநர் இளனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரை ரெப்ரஸண்ட் செய்யும் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் கேமியோ: இளன் இயக்கத்தில் கவின், பிரீத்தி முகுந்தன், லால் மற்றும் அதிதி போஹங்கர் நடித்துள்ள ஸ்டார் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் ஏற்கனவே கசிந்துள்ளன. இந்நிலையில், மேலும், 3 சர்ப்ரைஸ்கள் இருப்பதாக இளன் தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

சிறுவயது புகைப்படம்: சத்ரபதி சிவாஜி நாடகத்தில் இளன் சிறு வயதில் நடித்த புகைப்படத்துடன் தனது தந்தை ஸ்டில்ஸ் பாண்டியனுடன் இருக்கும் போட்டோவை தற்போது இளன் ஷேர் செய்துள்ளார். ஸ்டார் படத்தில் ஆரம்ப காட்சியில் இளம் வயது கவின் பாரதியார் கெட்டப்பில் நடிப்பது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டது அவரது வாழ்க்கையில் இருந்தே எடுக்கப்பட்ட சம்பவம் தான் என்பது இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது. தனது வாழ்க்கை மற்றும் தனது அப்பாவின் கதை எல்லாம் கலந்து தான் இந்த ஸ்டார் படத்தை இளன் கவினை வைத்து உருவாக்கி உள்ளதாக பேட்டியிலும் கூறியுள்ளார்.

Star Movie Director Elan requests fans don t reveal the 3 surprises which present in this movie

அதை மட்டும் சொல்லாதீங்க: கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் ப்ரீமியர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், படத்தில் 3 மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருக்கிறது என்றும் படத்தை பார்த்த யாரும் அதை ரிவீல் செய்ய வேண்டாம் என்றும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தியேட்டருக்குச் சென்று பார்த்து அதனை அனுபவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான அரண்மனை 4, அதற்கு முன்னதாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி உள்ளிட்ட படங்கள் 30 கோடிக்கும் அதிகமான வசூல் ஈட்டிய நிலையில், ஸ்டார் படம் 50 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Star Movie Director Elan requests fans don t reveal the 3 surprises which present in this movie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X