வாவ்.. பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங்ல இப்படியொரு சர்ப்ரைஸ் இருக்கா? வெளியான சூப்பர் அப்டேட்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி துவங்குகிறது.

பிரம்மாண்டமான துவக்க விழா நிகழ்ச்சியுடன் விஜய் டிவியின் இன்னொரு சூப்பரான அத்தியாயம் தொடங்க போகிறது.

ஸ்டார் விஜய் மியூசிக் எனும் புதிய சேனல் ஒன்று இசை ரசிகர்களுக்காக ஆரம்பமாக போகிறதாம்.

வெறித்தனமான வெயிட்டிங்

வெறித்தனமான வெயிட்டிங்

வரும் ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணி சீக்கிரம் வராதா என பிக்பாஸ் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங் செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவங்களாம் கன்ஃபார்மாம்

இவங்களாம் கன்ஃபார்மாம்

விஜய் டிவி இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள அனைத்து போட்டியாளர்கள் பெயர்களும் கிட்டத்தட்ட வெளியாகி விட்டன. சில சர்ப்ரைஸ் என்ட்ரிகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம் இந்த சீசனில் யார் கலக்கப் போறாங்கன்னு.

இவங்க தான் அடுத்த லாஸ்லியாவா?

இவங்க தான் அடுத்த லாஸ்லியாவா?

முதல் சீசனில் ஓவியா, இரண்டாம் சீசனில் யாஷிகா ஆனந்த், மூன்றாவது சீசனில் லாஸ்லியா என ரசிகர்கள் மனங்களை பல இளம் போட்டியாளர்கள் கவர்ந்தனர். வரும் 4வது சீசனில் அந்த இடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்கிற போட்டியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது. சீரியல் நடிகை ஷிவானி நாராயணனுக்குத் தான் ஆர்மி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரம்யா பாண்டியனும் டஃப் கொடுப்பார் என்றும் கூறுகின்றனர். பார்க்கலாம்.

புது அத்தியாயம்

புது அத்தியாயம்

விஜய் டிவியின் புது அத்தியாயமாக ஸ்டார் விஜய் மியூசிக் எனும் மியூசிக் சேனல் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் ஆரம்பமாக போகிறதாம். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிக்பாஸ் தமிழ் 4 சீசனின் கிராண்ட் ஓப்பனிங் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும் என்கிற ஹாட் அப்டேட் தற்போது கசிந்துள்ளது.

கெட் ரெடி

கெட் ரெடி

இது தொடர்பாக ஞாயிறன்று இரவு விஜய் டிவி ஒரு சின்ன புரமோ வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அதில், இரண்டு பொம்மைகள் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு நடனமாடுவது போல இருக்கிறது. Get Ready என்றும் சிக்னல் கொடுத்துள்ளது விஜய் டிவி. அதற்கு கீழே ரசிகர்கள் ஸ்டார் விஜய் மியூசிக் தானே என பங்கம் செய்து வருகின்றனர்.

செம டஃப்

செம டஃப்

ஏற்கனவே தமிழில் சன் மியூசிக், இசையருவி, ஜெயா மியூசிக், ராஜ் மியூசிக் என ஏகப்பட்ட இசை சேனல்கள் உள்ளன. ஸ்டார் விஜய் மியூசிக்கின் வரவு நிச்சயம் மற்ற முன்னணி டாப் இசை சேனல்களுக்கு டஃப் கொடுக்கும் என்றே தெரிகிறது. சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் எல்லாம் அந்த சேனலிலேயே இனி ஒளிபரப்பு செய்வார்களா? வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X