விஜய் டிவி-யின் மற்றுமொரு புதிய சேனல்.. இனிமேல் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்!

சென்னை : தமிழ் சேனல்களில் அதிக பார்வையாளர்களை கொண்டு தனித்துவமான பல நிகழ்ச்சிகள் மூலம் இன்றுவரை கம்பீரமாக முன்னணியில் வளர்ந்து கொண்டு வருகிறது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி.

விஜய் டிவி என்ற பெயரில் இயங்கிவந்த இந்த தொலைக்காட்சி சில வருடங்களுக்கு முன்பு ஸ்டார் குழுமத்துடன் இணைந்து இப்பொழுது ஸ்டார் விஜய் என்ற பெயரில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பல அசத்தலான நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் ஸ்டார் விஜய் இப்பொழுது புதிய பரிமாணத்துடன் மற்றுமொரு புதிய சேனலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இன்றுவரை முன்னணியில்

இன்றுவரை முன்னணியில்

மக்கள் அனைவரும் பெரிதும் விரும்பிப் பார்க்கக் கூடிய தொலைக்காட்சிகளில் மிக முக்கியமான ஒன்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. நீண்ட ஆண்டுகளாகவே தொடர்ந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்று இன்றுவரை முன்னணியில் கம்பீரமாக வளர்ந்து வருகிறது.

நீயா நானா

நீயா நானா

ஸ்டார் விஜய்-யில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகளும் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களை மகிழ வைத்த நிலையில் இன்றுவரை ரசனை மாறாமல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது நீயா நானா நிகழ்ச்சி.

திரையில் ஜொலிக்க வைத்துள்ளது

திரையில் ஜொலிக்க வைத்துள்ளது

நீயா நானா நிகழ்ச்சியை தொடர்ந்து ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், அது இது எது என வித்தியாச வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்று வரும் விஜய் டிவி
சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல திறமையான நட்சத்திரங்களையும் திரையில் ஜொலிக்க வைத்துள்ளது.

விஜய் சூப்பர்

விஜய் சூப்பர்

பல்வேறு நிகழ்ச்சிகளில் அவ்வப்போது டிஆர்பி-யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வரும் விஜய் டிவி ஒரு சில வருடங்களுக்கு முன்பு "விஜய் சூப்பர்" என்ற பெயரில் புதிய சேனலை அறிமுகப்படுத்தியது. முழுக்க முழுக்க திரைப்படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு தமிழ் திரைப்படங்களை தொடர்ந்து ஒளிபரப்பி மக்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.

கலர் கலரான பல ப்ரோமோக்கள்

கலர் கலரான பல ப்ரோமோக்கள்

பிக் பாஸ் சீசன் 3யின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது சீசன் 4-க்காக ரசிகர்கள் பலரும் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், வரும் அக்டோபர் 4ம் தேதி பிக் பாஸ் சீசன் 4 போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கலர் கலரான பல ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் மியூசிக்

விஜய் மியூசிக்

அதே சமயம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக அக்டோபர் 4ம் தேதி பிக் பாஸ் போட்டியாளர்களை அறிவிக்கும் அதேநாள் விஜய் டிவி-யின் மற்றுமொரு புதிய சேனலான "விஜய் மியூசிக்" என்ற சேனலை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

பல்வேறு கலகலப்பான நிகழ்ச்சிகள், சீரியல்கள் மற்றும் புதிய திரைப்படங்கள் என விஜய் டிவி ஒருபுறம் கலக்கிக் கொண்டிருக்க மற்றொருபுறம் விஜய் சூப்பரில் தொடர்ந்து திரைப்படங்களை ஒளிபரப்பி மக்களை மகிழ்வித்து கொண்டிருக்க, இப்பொழுது புத்தம் புதிய பொலிவுடன் அறிமுகமாக இருக்கும் "விஜய் மியூசிக்" சேனல் ரசிக்க வைக்கும் பாடல்களால் ரசிகர்களை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அதகலப்படுத்த காத்துக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X