twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி கற்கும் தனுஷ்… தமிழ் கற்கும் ஷாருக்…

    By Mayura Akilan
    |

    மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது தமிழ் கற்றுவருகிறார். தமிழ் நடிகர் தனுஷ் தற்போது இந்தி கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோபோல் பாலிவுட் நடிகை பிரியங்காசோப்ரா தெலுங்கு மொழி கற்று வருகிறாராம். இதற்கு காரணம் தெளிவான உச்சரிப்போது அந்த மொழியை பேச வேண்டும் என்பதுதான்.

    மொழியறிவு மிகவும் முக்கியம் - யாராக இருந்தாலும். அதுவும் தாங்கள் சாராத பாஷையைப் பேசும்போது ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். தற்போது சினிமா நடிகர், நடிகைகள் பலரும் பிற மொழிகளைக் கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இவர்கள் எல்லாம் தங்களது தொழில் நிமித்தமாகவே இதை கற்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் கற்பதை சரியாக செய்ய வேண்டும் என்பதிலும் கவனமாக உள்ளனர். இதற்குக் காரணம், படப்பிடிப்பில் தப்புத் தப்பாக உச்சரித்து ஷாருக் கான் சமீபத்தில் தர்மசங்கடத்துக்குள்ளானதுதானாம்..

    சென்னை எக்ஸ்பிரஸ் ஷாருக்

    சென்னை எக்ஸ்பிரஸ் ஷாருக்

    ஷாருக் கான் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ளார். இது தமிழ்நாட்டையும் உள்ளடக்கிய கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏராளமான தமிழ் நடிகர்களும் நடித்தனர்.

    தப்புத் தப்பாக கற்றுக் கொண்டார்..

    தப்புத் தப்பாக கற்றுக் கொண்டார்..

    படப்பிடிப்பின்போது தமிழ் நடிகர்கள் சிலரிடமிருந்து சில தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டாராம் ஷாருக். ஆனால் அவற்றை உச்சரித்தபோது தப்பாகி விட்டது.. குறிப்பாக பட்டக்ஸ் என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ்ப் பொருள் வரும் வார்த்தையை ஒருமுறை செட்டில் சொல்லி அத்தனை பேரும் சிரித்து விட்டனராம்.

    ரொம்பக் கவனமாக

    ரொம்பக் கவனமாக

    எல்லோரும் சிரித்ததால், அதன் அர்த்தத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ஷாருக், தானும் சிரித்து விட்டாராம். இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது தான் கற்கும் தமிழ் வார்த்தைகளின் அர்த்தத்தை முதலில் தெரிந்து கொண்டு எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு பேச முயற்சிக்கிறாராம்.

    தெலுங்கு கற்ற பிரியங்கா

    தெலுங்கு கற்ற பிரியங்கா

    அதேபோல பிரியங்கா சோப்ரா, தெலுங்கு கற்றுள்ளார். ஜான்ஜீர் படத்தின் தெலுங்குப் பதிப்புக்காக அவர் தெலுங்கு கற்றுள்ளார். இந்த படத்தின் டப்பிங்கை அவர் பேசப் போவதில்லையாம். இருப்பினும் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தெலுங்கு கற்றுக் கொண்டாராம். பரவாயில்லாமல் பேசுகிறார் என்று கூறுகிறார்கள்.

    தனுஷ்ஜி

    தனுஷ்ஜி

    ராஞ்சனா இந்திப் படத்துக்காக மும்பைக்குப் போன தனுஷ் இப்போது இந்தியிலும் சற்றே தேறி வருகிறாராம். ராஞ்சனா படப்பிடிப்பின்போது ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டாராம் தனுஷ் சரியாகப் பேசத் தெரியாமல். ஆனால் டப்பிங்கின்போது பிரமாதம் என்று கூற முடியாவிட்டாலும் கூட நன்றாக இருக்கிறதே என்று பாராட்டும் அளவுக்குப் பேசத் தேறி விட்டாராம்.

    தேவ்கனின் தமிழ், மராத்தி, குஜராத்தி, பெங்காலி புலமை

    தேவ்கனின் தமிழ், மராத்தி, குஜராத்தி, பெங்காலி புலமை

    அஜய் தேவ்கன் நிறைய மொழிகளில் ஓரளவு பரிச்சயம் உள்ளவராக இருக்கிறார். தமிழ் புரிகிறது. குஜராத்தி தெரிகிறது. பெங்காலி பேசுகிறார். மராத்தி கூட இப்போது கற்றுக் கொண்டிருக்கிறாராம். ஹிம்மத்வாலா படத்தில் ஒரு வசனத்தை இந்த மொழிகள் அனைத்திலும் அவர் பேசியுள்ளார்.

    English summary
    Shah Rukh Khan is not the only one who got mocked and stared at when he innocently said 'kundi khol' on the set of Chennai Express. 'Kundi' in Tamil means bum and in Hindi, it means latch.Having realised the boo-boo he made, the superstar is now learning stock phrases and a few lines in Tamil more carefully. One hears, at the functions held for Chennai Express down South, SRK will attempt to speak chaste Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X