ஸ்டார்ட் மியூசிக்...கவுண்டமணி இசையுடன் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட பிரபலங்கள்

சென்னை : இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. தினமும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகவும், உயிரிழப்போரின் எண்ணிக்கை 2000 க்கு அதிகமாகவும் இருந்து வருகிறது.

Recommended Video

Varalakshmi தடுப்பூசி விழிப்புணர்வு! | என்க்கு தடுப்பூசி பயம்? | Vaccination Awarness

பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் நோய் பரவல் குறைந்தபாடில்லை. நோய் பரவல் அதிகமாகும் நிலையிலும் முறையாக மாஸ்க் அணிய வேண்டும் என்ற மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படாமல் இருந்து வருகிறது.

விழிப்புணர்வு வீடியோ

டபிள் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தினாலும் வெகு சிலர் மட்டுமே கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் மாஸ்க்கை முறையாக எப்படி அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வரலட்சுமி சரத்குமார் மற்றும் 7 பிரபல நடிகர்கள் ஒன்றாக இணைந்து ஜாலியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஸ்டார்ட் மியூசிக்

ஸ்டார்ட் மியூசிக்

கவுண்டமணியின் புகழ்பெற்ற ஸ்டார்ட் மியூசிக் இசை பின்னணியில் இசைக்க, மாஸ்க் அணிவதில் மக்கள் செய்யும் தவறுகளை குறிப்பிட்டும், பிறகு எவ்வாறு முறையாக மாஸ்க் அணிய வேண்டும் என்பதை காட்டியும் விழிப்புணர்வு வீடியோவில் நடித்துள்ளனர்.

பிரபலங்கள் நடித்த வீடியோ

பிரபலங்கள் நடித்த வீடியோ

இந்த வீடியோவில் வரலட்சுமி, யோகிபாபு, ரெஜினா, சதீஷ், கிருஷ்ணா, வித்யுலேகா ரமணா, ஐஸ்வர்யா ராஜேஷ், சன்தீப் கிஷன், பிரியதர்ஷினி புலிகொண்டா போன்றோர் தோன்றி நடித்துள்ளனர். இந்த வீடியோவை வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தடுப்பூசிக்கு வீடியோ வெளியிட்ட வரலட்சுமி

தடுப்பூசிக்கு வீடியோ வெளியிட்ட வரலட்சுமி

வரலட்சுமி இது போன்ற விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் நிலவும் தயக்கங்கள், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெளிவாக தெரிவித்துள்ளார் வரலட்சுமி.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்

அத்துடன், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். வதந்திகளை புறக்கணியுங்கள். நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்க போட்டுட்டீங்களா. தடுப்பூசி போட்டுக் கொள்வோம். கொரோனாவை வெல்லோம் என்ற கேப்ஷனையும் பதிவிட்டிருந்தார் வரலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X