அடேங்கப்பா... சம்பளம் இவ்வளவு கோடியா? சூப்பர் ஸ்டாரை முந்தினார் விஜய்? தாறுமாறு தகவலால் பரபரப்பு
சென்னை: தளபதி 65 படத்துக்கு ரஜினிக்கு இணையான சம்பளம் நடிகர் விஜய்-க்கு கொடுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதில் அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
இதை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தளபதி 65 படம் பற்றி புதிய தகவல்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலாகின.

சன் பிக்சர்ஸ்
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வைரலாகின. அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்தனர்.

விஜய் மானேஜர்
இதற்கு ஆதாரமாக நடிகர் விஜய்யின் மானேஜர் ஜெகதீஷ் அனுப்பிய வாட்ஸப் மெசேஜையும் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், தான் அனுப்பியதாக சொல்லப்பட்ட வாட்ஸ் அப் மெசேஜ் பொய் என்று மறுத்தார், மானேஜர் ஜெகதீஷ்.

ரூ.100 கோடி
இந்நிலையில் தளபதி 65 படத்துக்காக, விஜய்-க்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள் ளதாகவும் இதில் ரூ.50 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு நிலவி வருகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சம்பள விஷயத்தில் விஜய் முந்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பொய் தகவல்
ஆனால், 'இது பொய்யான தகவலாகத்தான் இருக்கும். 100 கோடி சம்பளம் கொடுத்தால், படத்தின் பட்ஜெட் 160 முதல் 180 கோடி வரை ஆகும். இவ்வளவு செலவு செய்தால் எப்படி பிசினஸ் பண்ண முடியும், லாபம் பார்க்க முடியும்?' என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











